மேற்கு வங்க கவர்னராக இல.கணேசன் நியமனம்!

மேற்கு வங்க கவர்னராக இல.கணேசன் நியமனம்!
Published on

நாட்டின் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வருகிற ஆகஸ்ட் மாதம் நிறைவடைய இருக்கும் நிலையில், புதிய துணை ஜனாதிபதிக்கான வருகிற ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறும் என்றும், இப்பதவிக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு ஜூலை 19 கடைசி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்நிலையில் ஆளும் பிஜேபி சார்பில் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநரான ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து மேற்கு வங்க ஆளுநர் பதவியை ஜெகதீப் தங்கர் நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து மணிப்பூர் ஆளுநரான இல.கணேசன் தற்போது மேற்கு வங்க ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் மணிப்பூர் ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆளும் கட்சியாகவும், பாஜக எதிர்க்கட்சியாகவும் உள்ளது.

பொதுவாகவே பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் உரசல் போக்கு நிலவுவது வாடிக்கையாக உள்ளது.இந்நிலையில் மேற்கு வங்கத்தில் புதிய ஆளுநராக நியமிக்கப் பட்டுள்ள இல.கணேசன் எவ்வாறு செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com