அக்னிபத் திட்டம்: விமானப் படையில் சேர அழைப்பு!

அக்னிபத் திட்டம்: விமானப் படையில் சேர அழைப்பு!
Published on

அக்னிபத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப் படையில் சேர்வதற்கு  ஜூன் 24 முதல் ஜூலை 5-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

இந்திய ராணுவத்தின் முப்படைகளில் இளைஞா்களை ஒப்பந்த அடிப்படியில் 4 ஆண்டுகலுக்கு மட்டும் தற்காலிகமாகப் பணியமர்த்தும் 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேர்வதர்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 17.5 என்றும் அதிகபட்சமாக 23-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்த மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பீகார், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு அறிவிக்கையை நேற்று மத்திய அரசு வெளியிட்டது.இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தில் இந்திய விமானப்படையில் சேருவதற்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

-இதுகுறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்ததாவது:

அக்னிபத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப் படையில் சேர விரும்பும் இளைஞர்கள் ஜூன் 24-ம் தேதி முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அதன்படி  careerindianairforce.cdac.inஎன்ற இந்திய விமானப்படை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பம் செய்தவர்களுக்கான ஆன்லைன் தேர்வு ஜூலை 24 முதல் தொடங்கப் படும். இந்த பிரிவின்கீழ் தேர்வு பெற்று விமானப் படையில் சேரும் வீரர்கள் 'அக்னி வீர் வாயு' என அழைக்கப் படுவார்கள்.

-இவ்வாறு இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com