நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவர்: திரௌபதி முர்மு? 

நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவர்: திரௌபதி முர்மு? 
Published on

நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 

நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதிவிக்காலம் முடிவுற்ற நிலையில், புதிய குடியரசுத் தலைவர் தேர்வுக்கான வேட்பாளராக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த சின்ஹாவும் போட்டியிட்டனர்.

ஒடிசாவைச் சேர்ந்த பழங்குடி இனப் பெண்ணான திரௌபதி முர்மு, ஜார்கண்ட் ஆளுநராக பதவிவகித்தவர். இவருக்கு பாஜக கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி ஒரிசாவில் பிஜூ ஜனதாதளம், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, சிவசேனா, ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், மாயாவதியின் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

அந்த வகையில் நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் கடந்த 18-ம் தேதி நடத்தப்பட்டு, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அதன் முடிவில் நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்ற அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது

நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவர் தேர்வுக்கான வாக்குப்பதிவு கடந்த திங்கட்கிழமை (ஜூலை 18) நடந்து முடிந்தது. அதில் 719 நாடாளுமன்ற உறுப்பினர்களும், 9 சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர். பின்னர் வாக்கு பெட்டிகள் நாடாளுமன்றம் வளாகம் கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது. 

அந்த வகையில் இன்று நாடாளுமன்றத்தில் அறை எண் 73-ல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 11 மணிக்கு துவங்கியது. வாக்கு எண்ணிக்கையின் போது நாடாளுமன்றத்தின் செயலாளர், வேட்பாளரின் பிரதிநிதி ஒருவர் மற்றும் உதவியாளர்கள் உடனிருக்க அனுமதி வழங்கப் பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com