விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் : பயணிகள் பீதி!

விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல் : பயணிகள் பீதி!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

பாட்னாவிலிருந்து டெல்லி செல்லவிருந்த இண்டிகோ விமானத்தில் நேற்று நள்ளிரவு  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் தலைநகர் பாட்னாவிலிருந்து இண்டிகோ விமானம் ஒன்று நேற்று நள்ளிரவில் டெல்லி கிளம்பத் தயாரானது. அச்சமயம் விமானப் பயணி ஒருவர் தன் பையில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்ததால் விமானத்தினுள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பயணிகள் அனைவரும் விமானத்தை விட்டு வெளியேற்றப் பட்டனர்.

அதையடுத்து மோப்ப நாய், மற்றும் வெடிகுண்டு  கண்டுபிடிப்பு கருவிகளுடன் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்த போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படாததால், அது வெறும் புரளி என்று தெரிய வந்தது. இதையடுத்து வெடிகுண்டு புரளி கிளப்பிய நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com