அமெரிக்க அதிபருக்குப் புற்றுநோய்?!

அமெரிக்க அதிபருக்குப் புற்றுநோய்?!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனக்கு புற்றுநோய் இருந்ததாக பேசியது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தை ஆய்வு செய்ய சென்ற அதிபர் ஜோ பைடன், அதன்பின் செய்தியாளர்களிடம் பேசியதாவது;

சின்ன வயதில் எங்கள் இல்லம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அருகில்தான் அமைந்திருந்தது.அந்த நிலையங்களின் கழிவுகள் எங்கள் வீட்டு ஜன்னல்களில் ஒட்டிக்கொள்ளும். அதை சுத்தம் செய்வது அவ்வளவு எளிதல்ல.

ஜன்னல்களில் தானியங்கி துடைப்பான்கள் பொருத்த வேண்டும். அப்படியும் முழுமையாக எண்ணைக் கழிவுகளை நீக்க முடியாது. அதனாலேயே எனக்கும்  மற்றும் அப்பகுதியிலுள்ள பலருக்கும் புற்றுநோய் ஏற்பட்டது. அமெரிக்காவிலேயே நாங்கள் வசித்த டெலாவேர் பகுதிதான் அதிக புற்றுநோய் விகிதம் கொண்ட பகுதியாக இருந்தது.

-இவ்வாறு ஜோ பைடன் தெரிவித்தார்.

அதிபர் ஜோ பைடனின் இந்த பேச்சு அமெரிக்கா மட்டுமின்றி சர்வதேச அரங்கிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகை இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.அதில் தெரிவித்ததாவது;

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பல வருடம் முன்பு தோல் புற்றுநோய் பாதிப்பு இருந்தது. ஆனால் அவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம்  அதிபராக பதவியேற்பதற்கு முன்பாகவே முறையான சிகிச்சை பெற்று, அதிலிருந்து முழுமையாக மீண்டு குணமடைந்து விட்டார்.

-இவ்வாறு அமெரிக்க வெள்ளை மாளிகை சார்பில் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com