TNPSC குரூப் 1 தேர்வு; விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 

TNPSC குரூப் 1 தேர்வு; விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! 
Published on

தமிழக அரசுப் பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 

இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்ததாவது; 

தமிழக அரசுப் பணிகளான துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர்,வணிக வரித்துறை உதவி ஆணையர்,கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கான அறிப்பை கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் வெளியிட்டது.

இதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான tnpsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்திருந்தது.இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

ஆகஸ்ட் 27 முதல் 29-ம் தேதி வரை விண்ணங்களின் திருத்தம் மேற்கொள்ளலாம். மேலும் அக்டோபர் 30-நம் தேதி குரூப் 1 முதல் நிலைத் தேர்வு நடைபெறும். அதையடுத்து  முதன்மை தேர்வு குறித்து பின்னர் அறிவிக்கப்படும். 

இவ்வாறு டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? 

முதலில் tnpsc.gov.in | tnpscexams.in என்ற தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

பின்னர், ஒருமுறைப் பதிவில் தங்களது பதிவு எண்ணை சமர்ப்பித்து உள்நுழைய வேண்டும்.விண்ணப்பிக்கும் பதவியின் பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட உங்களின் புகைப்படத்தை மட்டுமே பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனுடன் கல்வித் தகுதி குறித்த விவரங்கள் அளிக்க வேண்டும்.

மாற்றுத் திறனாளி, முன்னாள் ராணுவத்தினர், அரசுப் பணியாளர் போன்ற சிறப்புப் பிரிவு தேர்வர்கள் அதற்கான சான்றிதழ் விவரங்களை அளிக்க வேண்டும். 

இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com