26 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
–இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு உண்டு.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை வரை (ஆகஸ்ட் 25) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
–இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.