சோனியா காந்தி சிகிச்சைக்காக வெளிநாடு பயணம்! 

சோனியா காந்தி சிகிச்சைக்காக வெளிநாடு பயணம்! 

Published on

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் கணேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டதாவது 

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்லவிருக்கிறார். அவருக்குத் துணையாக ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியும் செல்லவுள்ளனர். சோனியா காந்தி  இந்தியா திரும்புமுன், வெளிநாட்டில் வசிக்கும் உடல்நலமற்ற தன் தாயாரை சந்தித்துவிட்டு வருவார்.

ஆனால் செப்டம்பர் 4-ம் தேதி காங்கிரஸ் கட்சி நடத்தவுள்ள பண வீக்கத்துக்கு எதிர்ப்பான பேரணியில் ராகுல் காந்தி நிச்சயம் பங்கேற்பார். மேலும் செப்டம்பர் 7ஆம் தேதியன்று கன்னியாகுமரியில் தொடங்கவுள்ள காங்கிரஸின் மாபெரும் யாத்திரையிலும் அவர் பங்கேற்பார். 

இவ்வாறு அவர் தெரிவித்தார் 

logo
Kalki Online
kalkionline.com