நாடு முழுவதும் விரைவில் சுங்கச் சாவடிகள் ரத்து?

நாடு முழுவதும் விரைவில் சுங்கச் சாவடிகள் ரத்து?
Published on

நாடு முழுவதும் விரைவில் சுங்க சாவடிகளையும் வாகனங்களில் ஃபாஸ்டேக் வசூல் முறைஐயும் நீக்கிவிட்டு அதற்கு பதிலாக வாகனங்களில் புதிய நம்பர் பிளேட் பொருத்தும் முறை அறிமிகப் படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

-இதுகுறித்து மத்திய அரசு சார்பில் வெளியான தகவலில் தெரிவிக்கப் பட்டதாவது;

இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் பயணிக்க சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டேக் வசூல் முறை அமல்படுத்தப் பட்டுள்ளது.

பயணிகளின் நேர விரயம், சில்லறைத் தட்டுப்பாடு, எரிபொருள் வீணாவது போன்ற நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக ஃபாஸ்டேக்  அறிமுகம் செய்யப் பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஃபாஸ்டேக்  முறைக்குப் பதிலாக தேசிய நெடுஞ்சாலைகளின் குறிப்பிட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவ்வழியாகச் செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட் அடிப்படையில் அந்த வாகன உரிமையாளரிடம் ஆன்லைனில் கட்டணம் வசூலிக்கப்படும் .

இதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் 'நம்பர் பிளேட் ரீடர்' கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்கான பரிசீலனைக் கூட்டங்களும் ,முதல் கட்ட சோதனை ஆய்வு முறைகளும் தொடங்கப் பட்டுள்ளன.  இந்த புதிய திட்டத்திற்காக சம்பந்தப்பட்ட சுங்கச் சாவடி நிறுவனங்கள் வழங்கும் நம்பர் பிளேட்டை வாங்கி சம்பந்தப்பட்ட வாகனங்களில் பொருத்த வேண்டியது அவசியம்.

இந்த புதிய திட்டத்துக்கான மசோதாவை அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது. அந்த புதிய சட்டத்தின்படி தற்போதுள்ள சுங்கச் சாவடிகள் நீக்கப்பட்டு, ஃபாஸ்டேக் முறையும் ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

-இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com