
ரயில் பயணத்தின் போது வாட்ஸ்அப் மூலம் ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்யும் வசதியை இந்திய ரயில்வேத்துறை அறிமுகம் செய்துள்ளது.
-இதுகுறித்து இந்திய ரயில்வேத் துறையான ஐஆர்சிடிசி தெரிவித்ததாவது;
இந்திய ரயில்வேயின் புதிய வசதியாக பயணிகள் ரயிலில் பயணிக்கும்போது வாட்ஸப் மூலமாக ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்யும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. ரயில்வேயின் உணவு விநியோக சேவையான ஜூப் (Zoop), சமீபத்தில் ஜியோ ஹாப்டிக் உடன் இணைந்து இந்த வாட்ஸ்அப் சாட்பாட் சேவையை அறிமுகப் படுத்தியுள்ளது
இதன்மூலம் பயணிகள் உணவை ஆர்டர் செய்யலாம்.
இந்த சாட்பாக்ஸ் மூலம் ஒரு சில எளிய படிநிலைகளில் பயணிகள் தங்கள் PNR எண்ணைப் பயன்படுத்தி ரயில் இருக்கையில் இருந்தே உணவை ஆர்டர் செய்யலாம்.
– இவ்வாறு ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.