5ஜி சேவை அக்டோபர் 12-ல் துவங்கும்: மத்திய அமைச்சர்!

5ஜி சேவை அக்டோபர் 12-ல் துவங்கும்: மத்திய அமைச்சர்!

இந்தியாவில்  5ஜி சேவை அக்டோபர் 12-ம் தேதிக்குள் தொடங்கப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

-இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது;

இந்தியாவில் அக்டோபர் இறுதிக்குள் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டு, அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் இந்த சேவை விரிவுபடுத்தப்படும்.

முதற்கட்டமாக நாட்டின் 13 முக்கிய நகரங்களில், 5ஜி சேவை மலிவு விலையில் வழங்கிட மத்திய அரசு உறுதி செய்யும். இந்த 5ஜி சேவை நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் கவனம் செலுத்துகிறது. இதற்காக தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் அந்த வகையில் பணியாற்றி வருகின்றனர்.

-இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களிடம் இருந்து ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்காக சுமார் 17,876 கோடி ரூபாயை DoT பெற்றுள்ளது. நாட்டின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு அலைக்கற்றை ஏலம் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான ஏலங்களைப் பெற்றது. முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் ரூ.87,946.93 கோடி ஏலத்தில் கணிசமாக எடுத்துள்ளது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com