நாட்டில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் இன்று முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. அந்த வகையில் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன்பு இன்று நடைபெறும் வழக்குகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
உச்ச நீதிமன்றத்தின் நடைமுறைகளை கொள்கையளவில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு 2018-ம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அந்த தீர்ப்புக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் நேரடி ஒளிபரப்பு நடப்பது இதுவே முதல் முறை. இந்திய தலைமை நீதிபதி என்.வி. ரமணளின்றுடன் பணி ஓய்வு பெறும் நிலையில் அந்த நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.
இதுகுறித்து உச்சநீதிமன்றத்தின் கம்ப்யூட்டர் செல் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டதாவது:
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவின் பணியிறுதி நாளான இன்று அவருக்கு தகுந்த மரியாதை செய்யப்படுகிறது. அந்த வகையில் சுப்ரீம் கோர்ட்டின் இன்றைய நடவடிக்கைகள் இன்று காலை 10:30 மணி முதல் NIC வெப்காஸ்ட் போர்ட்டல் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். இவற்றை https://webcast.gov.in/events/MTc5Mg என்ற இணையதளத்தில் காணலாம்.
-இவ்வாறு கூறப்பட்டுள்ளது.