டாக்டர். அப்துல் கலாம் நினைவு தினம்; பாரத ரத்தினத்துக்கு அஞ்சலி!

டாக்டர். அப்துல் கலாம் நினைவு தினம்; பாரத ரத்தினத்துக்கு அஞ்சலி!

இன்று முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். அப்துல் கலாமின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப் படுகிறது. அந்த வகையில் ராமநாதபுரம் அருகே பேய்க்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் அப்துல் கலாமின் குடும்பத்தினர் இஸ்லாமிய முறைப்படி அஞ்சலி செலுத்தி மலர் மரியாதை செய்தனர். 

இதனிடையே, அப்துல் கலாமின் நினைவை போற்றும் வகையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன் டிவிட்டரில் பதிவிட்டதாவது;

ராமேஸ்வரத்தில் பிறந்த ராக்கெட் விஞ்ஞானி, ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம், சாமானிய குடும்பத்தில் பிறந்த சாம்ராட்.. மேலும் இவர் மதம் மொழி சாதி பிரிவு பிறப்பிடம் என வரம்புகளுக்குள் அடங்காத அறிவுச் சூரியன். 

இறைவனை பகுத்தாய்ந்த வள்ளலார் இறைவனோடு கரைந்து விட்டார். மேகவெளியை பகுத்தாய்ந்த கலாம் ஐயா மேகாலயத்தில் மறைந்துவிட்டார். விண்வெளி, அணுமின் ஆற்றல், ராக்கெட்டுகள், ஏவுகணைகள் ஆகிய துறைகளின் விஞ்ஞானியாக, ஆராய்ச்சியாளராக, ஆசிரியராக, இந்திய குடியரசுத் தலைவராக அக்கினி சிறகுகள் விரித்தவர் இந்த பாரதத்தின் ரத்தினம்.  

இந்திய இளைஞர்களுக்காக, 2011-ல் ஊழலை ஒழிக்க "நான் என்ன தர முடியும்" என்ற இயக்கத்தைத் நீங்கள் தொடங்கியபோது, உங்களால் உருவாக்கப்பட்ட ஊழல் ஒழிக்கும் படையில் ஒருவனாக இந்நாளில் தங்களை வணங்குகிறேன். என்றும் வாழ்த்துங்கள், வழிகாட்டுங்கள்.

-இவ்வாறு அண்ணாமலை தன் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com