தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!
Updated on

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:

சென்னையில் பல்வேறு இடங்களில் நேற்றிரவு மழை பெய்தது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்னும் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள், அதனையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com