சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி-க்கள்; 50 மணி நேர போராட்டம்!

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி-க்கள்; 50 மணி நேர போராட்டம்!

நாடாளுமன்றத்தில் நடந்து வரும் மழைக்காலக் கூட்டத் தொடரில் எதிர்க் கட்சி எம்.பி-க்கள் 4 பேர் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி இதுவரை லோக்சபாவில் 4 எம்.பிக்களும், ராஜ்யசபாவில் 20 எம்.பி-க்களும் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர். இதை எதிர்த்து அந்த எம்.பிக்கள் 50 மணி நேர போராட்டத்தை அறிவுத்துள்ளனர்.

சஸ்பென்ட் செய்யப்பட்ட மக்களவை எம்.பிக்கள் நான்கு பேரும் நாடாளுமன்றக் கட்டடத்தின் பிரதான நுழைவு வாயில் படிக்கட்டுகளில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தி.மு., எம்.பி-க்கள் காந்தி சிலை முன் அமர்ந்து கோஷங்கள் எழுப்பினர்

-இந்நிலையில் சஸ்பென்ட் செய்யப்பட்ட எம்.பி-க்கள் மன்னிப்பு கேட்டால், அவர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை திரும்ப பெறப்படும் என, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்கு ஜோதிமணி, மாணிக் தாக்கூர் உள்ளிட்ட 4 எம்.பி-க்களும் ஒப்புகொள்ளாததுடன் 50 மணி நேர தொடர் போராட்டத்தையும் அறிவித்துள்ளனர்.

'மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை. விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த விரும்புகிறோம். ஆனால் அதனை கேட்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டோம். எங்களின் 50 மணி நேர போராட்டம் நாடாளுமன்றத்துக்கு வெளிப்பகுதியில் தொடரும்

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com