ஆம் ஆத்மி கட்சியில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

ஆம் ஆத்மி கட்சியில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!
Published on

ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு யாருக்கு உள்ளது என்பதற்காக இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

-இதுகுறித்து ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்ததாவது;

ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு தாவியதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக டெல்லி சட்டமன்றத்தில் இன்று ஆம் ஆத்மி கட்சி மீதான நம்பிக்கை தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.

ஒரு மாநிலத்தில் ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்தாலோ அல்லது ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தாலோ எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த கோரிக்கை விடுப்பார்கள்.

ஆனால், டெல்லியில் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி கட்சி அம்மாநில சட்டமன்றத்தில் இன்று தனக்குத் தானே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தீர்மானித்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேறி பாஜக வசம் சென்றதாகத் தகவல் வெளியானதால், உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துரைக்க சுய பரிசோதனையாக இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

-இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com