தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
Published on

தமிழகத்தில் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

-இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது;

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால், கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7129 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

இந்த அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் தற்போது 49.75 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. அணியிலிருந்து நீர் வெளியேற்றப் படுவதால், அணையின் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது. எனவே பொதுமக்கள் அணைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கே.ஆர்.பி அணையில் இருந்து எந்த நேரமும் கூடுதல் நீர் திறக்க வாய்ப்பு உள்ள காரணத்தால் தென்பெண்ணை ஆறு செல்ல கூடிய கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com