தமிழகத்தில் புதுமைப் பெண் திட்டம்; செப்டம்பர் 5-ல் தொடக்கம்!

தமிழகத்தில் புதுமைப் பெண் திட்டம்; செப்டம்பர் 5-ல் தொடக்கம்!
Published on

தமிழகத்தில் அரசு பள்ளியில் 6 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மேற்படிப்பு பயில்வதற்கு உதவியாக மாதம் ரூ 1000 உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இத்திடத்திற்கு 'புதுமைப் பெண்' திட்டம் என்று பெயர் சூட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

-இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது;

தமிழகத்தில் அரசு பள்ளியில் 6 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகள், மேற்கொண்டு பட்டப்படிப்பு, பட்டய படிப்பு மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றைப் பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ. 1000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

அந்தந்த மாணவிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மாதாமாதம் இந்த தொகை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த திட்டத்துக்கு 'புதுமைப் பெண்' திட்டம் என பெயர் சூட்டப் பட்டுள்ளது.

கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் இந்த புதுமைப் பெண் திட்டத்தை செப்டம்பர் 5-ம் தேதி சென்னையில் நடக்கும் தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்கவுள்ளார்,மேலும் அவர் தமிழ்நாட்டில் 15 மாதிரி பள்ளிகள் மற்றும் 28 சீர்மிகு பள்ளிகளை தொடங்கி வைக்கவுள்ளார்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com