தீபாவளி முதல் ஜியோ 5ஜி சேவை: முகேஷ் அம்பானி!

தீபாவளி முதல் ஜியோ 5ஜி சேவை: முகேஷ் அம்பானி!

நாட்டில் தீபாவளி முதல் ஜியோ 5ஜி சேவை முக்கிய நகரங்களான சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி ஆகியவற்றில் தொடங்கப்படும் என்று ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் முகேஷ் அம்பானி பேசுகையில் தெரிவித்ததாவது;

நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஜியோ நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. ஜியோ வாடிக்கையாளர்கள் சராசரியாக மாதத்திற்கு 20 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி வருகிறார்கள்.

மேலும் வருகிற தீபாவளி முதல் சென்னை, மும்பை, கொல்கதா, டெல்லி ஆகிய நகரங்களில் ஜியோ 5ஜி இணைய சேவை அறிமுகப் படுத்தப்படும்.அதையடுத்து  2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நாட்டின் அனைத்து ஊர்களிலும் ஜியோ 5ஜி சேவையை வழங்கப்படும்.

-இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தற்போதுள்ள 4ஜி சேவையைவிட 10 மடங்கு வேகத்தில் 5ஜி இணைய சேவை மூலம் தரவுகளை விரைவாக பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com