கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் செல்வாக்கு குறைந்துள்ளது:கருத்துகணிப்பில் தகவல்! 

justin trudeau
justin trudeau

ந்தியாவுக்கு எதிராக மோதலை உண்டாக்கும் வகையில் செயல்பட்டு வரும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் செல்வாக்கு குறைந்துவிட்டதாக, கனடாவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது. 

கடந்த ஜூன் 18ம் தேதி கலிஸ்தான் தலைவர்களில் ஒருவரான சீக்கியர் நிஜ்ஜார் என்பவர் கனடாவில், தன் வாகனம் நிறுத்துமிடத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் ஏற்கனவே இந்தியாவில் தேடப்பட்டு வந்த நபர் ஆவார். இவரை கைது செய்ய உதவுபவர்களுக்கு 10 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்றும் இந்தியா தெரிவித்திருந்தது.

1997 ஆம் ஆண்டு கனடாவுக்கு சென்ற நிஜ்ஜார், இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதால் 2020ல் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார். எனவே தற்போது அவருடைய கொலைக்கு காரணமாக இந்திய அரசின் ஏஜென்ட்கள் இருக்கலாம் என கனடா பிரதமர் ட்ரூடோ இந்தியா மீது குற்றம் சாட்டினர். 

இந்நிலையில் காலிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில், இந்தியா மீது நேரடியாக கனடா குற்றம் சாட்டுவதால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. கனடாவின் குற்றச்சாட்டுக்கு இந்தியா தரப்பிலிருந்து மறுப்பும் கண்டனங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இப்படி இந்தியாவை எதிர்த்து மோதல் போக்கை பிரதமர் கையாண்டு வருவதால் அவரது செல்வாக்கு குறைந்துவிட்டதாக, Ipsos Poll என்ற கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. 

இன்று தேர்தல் நடந்தாலும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவரான 'பியாரே போயிலிவேர்' பிரதமராவதற்கு 40 சதவீத கனடா மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். கனடாவில் வருகிற 2025 இல் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால், கடந்த ஜூன் மாதத்தில் எடுக்கப்பட்ட சர்வேயில் கடந்த 50 ஆண்டுகளில் மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோதான் என்று முடிவுகள் வெளியானது.

எனவே தற்போது இந்தியாவுக்கு எதிராக இவர் மோசமான போக்கை கையாண்டு வருவதால் வரும் தேர்தலில் இது அவருக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மேலும் காலிஸ்தான் இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அவர் செயல்பட்டு வருவதாகவும், பல குற்றச்சாட்டுகள் சொந்த நாட்டிலேயே வைக்கப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com