கலைஞர் நூற்றாண்டு நூலகம்... முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைப்பு!

கலைஞர் நூற்றாண்டு நூலகம்... முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைப்பு!
Published on

துரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறை கட்டட வளாகத்தில் 134 கோடி ரூபாய் மதிப்பில் 8 தளங்களில் நவீன வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டுள்ளது. தமிழர் பண்பாடு, அறிவியல் கண்டுபிடிப்புகள் அடங்கிய கலைக்கூடம், மாநாட்டு கூடம், வரவேற்பு அரங்கம் உள்ளிட்டவை இதில் இடம் பெற்றுள்ளன.

நூலக கட்டிட நுழைவாயில் முன்பு கலைஞரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ள இந்த நூலகத்திற்கு உள்ளே வருவதற்கு ஒரு நுழைவாயில், வெளியே செல்வதற்கு ஒரு நுழைவாயில் என 2 வாயில்கள் உள்ளன. உள்ளே வந்தவுடன் நூலக கட்டிடத்திற்கு செல்ல ஒரு மிகப்பெரிய நுழைவாயிலும், அங்குள்ள 2 மாநாட்டு கூடங்களுக்கு செல்ல தனித்தனி வாயில்களும் என மொத்தம் 3 வாயில்கள் அமைந்துள்ளன.

நூலகத்துக்காக சுமார் 60 கோடி ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. முதல் தளம் முதல் ஆறாம் தளம் வரை 2 லட்சத்திற்கும் அதிகமான நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், ஆராய்ச்சியாளர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராவோர், மூத்த குடிமக்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் பயன்படும் வகையில் இந்த நூலகம் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த 1918 ஆம் ஆண்டில்வெளிவந்த ஜஸ்டிஸ் ஆங்கில இதழ்கள், திராவிட இயக்கத் தலைவர்கள் வெளியிட்ட 50க்கும் மேற்பட்ட இதழ்கள், 1824ஆம் ஆண்டில் வெளிவந்த சதுரகராதி முதல் பதிப்பு உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.  

உலகத்தரம் வாய்ந்த அளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை நேரில் திறந்து வைக்கிறார். முதல்வரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Madurai kalaingar library opened today

Madurai library, kalaingar library, madurai kalaingar library, தென்னகத்தின் களஞ்சியம், கலைஞர், நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com