கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா: திமுகவின் ஓராண்டு நிகழ்ச்சி தொகுப்பு!
தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட திமுக தலைமை திட்டமிட்டு உள்ளது. அந்த வகையில் ஆண்டு முழுமைக்குமான நிகழ்ச்சிகளை அந்தக் கட்சி அட்டவணைப்படுத்தி இருக்கிறது. கலை இரவு, திரைக்கலைஞர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி, மாணவர்களை ஊக்கப்படுத்தும் மாணவர் மன்றம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளோடு இந்த அட்டவணை மிகப் பெரியதாக நீள்கிறது.
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் குறித்த விவரம்:
மாணவர்களுக்கான, ‘வினாடி – வினா’ போட்டிகள்: இந்தப் போட்டிகளில் பங்கு பெற விரும்புவோர் அதற்கான செயலியில் (App) உங்கள் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதில் முதல்கட்டமாக மாவட்ட வாரியான போட்டிகளும், இரண்டாம்கட்டமாக மண்டல வாரியான போட்டிகளும், மூன்றாம்கட்டமாக மாநில அளவிலான பேட்டிகளும் நடைபெறும்.
* கவியரங்கம், கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி நடத்துதல்.
* கலை இரவு (கலைஞர் சார்ந்த கலை நிகழ்ச்சிகள்) நடத்துதல்.
* 'கலைஞர் சுடர்' ஏந்தி, கலைஞர் கோட்டம் வரை தொடர் ஓட்ட நிகழ்ச்சி.
* மாவட்டவாரியாக, 'மாரத்தான் தொடர் ஓட்டம்' மற்றும் மாவட்ட வாரியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல்.
* கலைஞர் எழுதிய திரைப்பட வசனங்களை ஒப்பித்தல்.
*கலைஞர் குறித்த நிகழ்வுகளையும் - தகவல்களையும் சமூக வலைதளங்களில் Reels தயாரித்து ஆண்டு முழுவதும் வெளியிடுதல்.
தொழிற்சங்கத்தின் சார்பில் நிகழ்ச்சிகள்:
* சட்டத்துறை சார்பில் பேச்சுப் போட்டிகள் நடத்துல். இதன் தலைப்புகள்: 'மாநில சுயாட்சி' மற்றும் 'அரசியல் சட்ட மாண்புகளைக் காப்போம்.'
* மகளிர் அணியின் சார்பில் ‘Podcast.’
* கழகச் சொற்பொழிவாளர்களைக் கொண்டு கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் நடத்துதல்.
* ஆங்கிலக் கருத்தரங்கங்கள் (Symposium in English) நடத்துதல்.
* கூட்டணிக் கட்சி சொற்பொழிவாளர்களைக் கொண்டு, மாவட்ட அளவில் கருத்தரங்கங்கள் நடத்துதல்.
* கலைஞரின் இலக்கியங்கள் குறித்து தமிழறிஞர்கள் கலந்துகொள்ளும் ஆய்வரங்கங்கள் நடத்துதல்.
* கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவின்போது திரைத்துறைக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் ‘கலை நிகழ்ச்சி’களை நடத்துதல்.
* திருநங்கைகள் - மாற்றுத் திறனாளிகள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள்.
* அனைத்து நிகழ்ச்சிகளையும் சமூக வலைதளத்தில் பகிர்தல்.
* கல்லூரிகளில் கலைஞர் பிறந்த நாள் நிகழ்ச்சிகளை நடத்துதல்.
* கலைஞரின் படைப்புகள் குறித்து கல்வியாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு.
* கழக மாவட்டங்கள் அனைத்திலும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை கழகச் சொற்பொழிவாளர்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு.
* மாவட்டந்தோறும் திரைப்படக் கலைஞர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு.
* மாவட்டத் தலைநகரங்களில், ‘புகைப்படக் கண்காட்சி’ நடத்துதல்.
* அயலக அணியின் சார்பில் தமிழர்கள் வாழும் வெளிநாடுகளில் கருத்தரங்கம் நடத்துதல்.
* மகளிர் அணி சார்பில் மாவட்டந்தோறும் கருத்தரங்கங்கள், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல்.
* 'தேதி சொல்லும் சேதி' வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய நூல் வெளியீடு.
* கலைஞர் நூற்றாண்டில் அவர் நடத்திய தமிழ்நாடு மாணவர் மன்றம் மீண்டும் உருவாக்கப்பட்டு கல்லூரிகளில் தனி அமைப்பாகச் செயல்பட ஏற்பாடு.
* மாவட்ட வாரியாகப் பேச்சுப் போட்டி நடத்தி, மாநில அளவில் சிறந்த 100 பேச்சாளர்களைக் கண்டறிந்து கழக சொற்பொழிவாளர்களாக மாற்றுதல்.
* மண்டல வாரியாக பேச்சாளர்களுக்கான ஒரு நாள் பயிலரங்கு நடத்துதல்.
* கலைஞர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கிய இடங்களான கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், சமத்துவபுரங்கள் ஆகியவற்றை மக்களுக்கு நினைவூட்டும் வகையில் அந்த இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்துதல்.
* ‘கலைஞர் 100’ என்ற பெயரில் பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப் பக்கங்களைத் தொடங்கி பரப்புதல்.
* கலைஞர் கருணாநிதியின் முக்கியமான படைப்புகளை மாணவர்களுக்குப் பரிசாக வழங்கிட ஏற்பாடு.
* மகளிர் அணியின் சார்பில், ‘கலைஞரும், மகளிர் மேம்பாடும்’ எனும் தலைப்பில் பயிற்சிப் பாசறைகள் மற்றும் பயிலரங்கங்கள் நடத்துதல்.
* கலைஞர் திரைக்கதை, வசனம் எழுதிய திரைப்படங்களை மாவட்டந்தோறும் காட்சிப்படுத்துதல்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளை அட்டவணைப்படுத்தி கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட திமுக சார்பில் திட்டமிடப்பட்டு உள்ளது.