கலாஷேத்ரா பாலியல் விவகாரம்: ஹரிபத்மனுக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு!

கலாஷேத்ரா பாலியல் விவகாரம்: ஹரிபத்மனுக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு!

திருவான்மியூரில் இயங்கிவந்த கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த விவகாரத்தில், அந்தக் கல்லூரியின் பேராசிரியர் ஹரிபத்மன் சென்ற மாதம் 3ம் தேதி கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, அடையாறு அனைத்து மகளிர் போலீசார் அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹரிபத்மன் சார்பாக நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார்.

இன்று இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றமும் ஹரிபத்மனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுத்து, அவது மனுவைத் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் இன்னும் நிறைய சாட்சிகளை விசாரிக்க இருப்பதாகவும், அதற்கு இந்த இடைக்கால ஜாமீன் இடையூறாக இருக்கும் எனக் கருதி இந்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த மனு மீதான விசாரணையை வரும் ஜூன் மாதம் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். அதைத் தொடர்ந்து ஹரிபத்மன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com