கலாஷேத்ரா பாலியல் புகாரை தீவிரமாக விசாரிக்க வேண்டும்! ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து!

கலாஷேத்ரா பாலியல் புகாரை  தீவிரமாக விசாரிக்க வேண்டும்!   ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து!

சென்னை ரோட்டரி சங்கம் சார்பாக பெண்களுக்கான உடல் மற்றும் மன நல விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று தரமணியில் உள்ள IIT வளாகத்தில் நடைபெற்றது. இதில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பெண்களுக்கான உடல் மற்றும் மன நலம் குறித்து மேடையில் உரையாற்றிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இது குறித்து பல்வேறு தகவல்களை பரிமாறிக்கொண்டார். தனது படிப்பு, பதவி , அறிவு, திறமை குறித்து பேசாமல் தன்னை உருவ கேலி செய்து மகிழ்ந்து வருகிறார்கள். தான் கருங்கல் போன்று உறுதியானவள் , அவ்வளவு எளிதாக தன்னை உடைக்க இயலாது என தெரிவித்தார். தான் அது குறித்தெல்லாம் அதிகம் கவலை கொள்ளாமல் தொடர்ந்து தனது அரசியல் மற்றும் அலுவல்களில் மட்டுமே கவனம் கொண்டு முன்னேறி வருவதாக தெரிவித்தார். இதே போன்று பெண்கள் தங்கள் மீதான விமர்சனங்களை தூசு போல் தட்டி விட்டு கடந்து சென்று முன்னேறி காட்ட வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும் இரட்டை ஆளுநர் பதவி குறித்து கூறுகையில் " தெலங்கானாவிற்கு ஆளுநராக நியமிக்கப்பட்ட போது மகப்பேறு மருத்துவரான நான், புதிய குழந்தையாக பிறந்துள்ள தெலுங்கானாவை சிறப்பாக பார்த்துக் கொள்வேன் என்றேன். ஓராண்டு காலம் சிறப்பாக செயல்பட்டதால் புதுச்சேரி மாநிலத்திற்கு கூடுதல் பொறுப்பு தரப்பட்டது. அப்போதும் கேள்வி எழுப்பினார்கள். ஒரு மாநிலத்தில் செயல்பட்டு வரும் நிலையில், எப்படி இன்னொரு மாநிலத்தை கவனிக்க முடியும் என கேள்வி எழுப்பினார்கள். அப்போது நான் கூறினேன், மகப்பேறு மருத்துவரான நான் ஒரு குழந்தை பிறந்தாலும் இரண்டு குழந்தை பிறந்தாலும் மிக சிறப்பாக கையாள்வேன் என்றேன்" என்று கலகலப்பாக பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த‌ போது, கலாஷேத்ராவில் நடந்து வரும் பாலியல் புகார்கள் குறித்து கேள்வி எழுப்ப‌ப்பட்டது. அதற்கு, பெண்கள் மீது குற்றச்சாட்டு வந்தால் உடனே விசாரிக்க வேண்டும் என்றார். பாலியல் புகார்கள் குறித்து பெண்கள் வெளியே சொல்வதே மிகவும் அரிது என்ற அவர், பெண் இனம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறினார். கலாஷேத்ரா பாலியல் புகார் விவகாரத்தில், தீவிர விசாரணை நடைபெற வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்த‌ர‌ராஜன் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், பெண்கள் முழு உடல் பரிசோதனையை கட்டாயம் வருடம் ஒரு முறை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். முக மேக்கப்பிற்கு மாதம் 5 ஆயிரம் செலவு செய்யும் பெண்கள், உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.

தற்போது சூழலில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகம் வருவதாக தெரிவித்த தமிழிசை, பெண்கள் தங்கள் உடல் நலம் மற்றும் உடல்நலனில் முழு அக்கறை செலுத்தி முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com