புத்தகக் காட்சியில் கல்கியின் பொன்னியின் செல்வன் அமோக விற்பனை! எத்தனை லட்சம் தெரியுமா?

புத்தகக் காட்சியில் கல்கியின் பொன்னியின் செல்வன் அமோக விற்பனை! எத்தனை லட்சம் தெரியுமா?
Published on

சமீபத்தில் வெளியாகி வெற்றிப் பெற்றத் திரைப்படம், ஆசிரியர் கல்கி அவர்களின்  'பொன்னியின் செல்வன்' ஆகும். மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில்,  ஏராளமான பொருட் செலவில் உருவான,பொன்னியின் செல்வன், கதாபாத்திரங்கள்  கண்முன்னே உலவியது அருமை!

'கல்கி'யின்  பொன்னியின் செல்வன் சரித்திர  நாவல் சாகாவரம் பெற்றதாகும்.  அந்நாளில் எத்தனைப் பாகங்களாக இருந்தாலும் இந்த,நாவலை எடுத்தால், படிக்காமல் கீழே வைக்க முடியாது. மற்ற பணிகளெல்லாம் அப்புறம்தான்.

சமீபத்தில் சென்னையில், ஒய்.எம்.சி.எ. திடலில் நடந்து முடிந்த, 2023 புத்தகக் கண்காட்சியில்,  பொன்னியின் செல்வன் கதையை, குழந்தைகளுக்கான 'காமிக்ஸ் புத்தகமாக' வெளியிட்டிருந்தார்கள்‌  அந்தக் கண்காட்சிக்கு வந்திருந்த குழந்தைகள் முன், இந்தப் பொன்னியின் செல்வன் காமிக்ஸ் புத்தகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. பெரியவர்களும் ரசிக்கத் தவறவில்லை.

புத்தகக் கண்காட்சியில், இந்த காமிக்ஸ் புத்தகங்களின் தொகுப்பின் தமிழ் பதிப்பு, 3400 ரூபாய்க்கும் , ஆங்கில பதிப்பு 2500 ரூபாய்க்கும் விற்பனையானது.  இந்த 12 நாட்களில் சுமார் 1.70 லட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்தன.  காமிக்ஸ் புத்தகங்கள் 2k குழந்தைகளிடையே அமோக வரவேற்பு அடைந்ததற்கு இதுவே ஆதாரம்.

அதுமட்டுமன்றி தமிழர் வாழ்வு பற்றியும், மாமன்னன் ராஜ ராஜ சோழன் குறித்தும், அறிந்துக் கொள்வதில் வெளிநாட்டனவர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த காமிக்ஸ் புத்தகங்களுக்கு,  அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து, ஆர்டர்கள் வந்தவண்ணம் இருக்கிறது.

கல்கியின், அனைத்து நாவல்களுமே அருமையானவை. இவையனைத்தும் காலங்கள் தாண்டி, ஆசிரியர் கல்கி அவர்களின் புகழ் பாடிக் கொண்டேயிருக்கும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com