அன்னபாக்யா திட்டத்தை தொடங்கினார் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஏழைகளுக்கு 5 கிலோ அரிசிக்கு பதில் பணம்!

அன்னபாக்யா திட்டத்தை தொடங்கினார் கர்நாடக முதல்வர் சித்தராமையா ஏழைகளுக்கு 5 கிலோ அரிசிக்கு பதில் பணம்!
Published on

ர்நாடக முதல்வர் சித்தராமையா அன்னபாக்யா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்குவதற்கு பதில் பணம் கொடுக்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்த தொகை ரேஷன் கார்டுதார்ர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் தேர்தலின் போது அளிக்கப்பட்ட ஐந்து வாக்குறுதிகளில் மேலும் ஒரு வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார்.

தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏழைமக்களுக்கு அன்னபாக்யா திட்டத்தின்கீழ் வழங்கப்படும் இலவச அரிசி 5 கிலோவிலிருந்து 10 கிலோவாக உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த்து.

காங்கிரஸ் கட்சி தேர்தலி அமோக வெற்றிபெற்றதை அடுத்து முதல்வராக சித்தராமையை பதவியேற்றார். அவர் பொறுப்பேற்றதும் வருகிற ஜூலை மாதம் 1 ஆம் தேதியிலிருந்து அன்னபாக்யா திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு 10 கிலோ இலவச அரசி வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் ஏழைகளுக்கு கூடுதலாக அரிசி வழங்குவதற்காக தேவைப்படும் அரிசியை ஒதுக்கீடு செய்யுமாறு இந்திய உணவுக்கழகத்திடம் கர்நாடக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், முதலில் உறுதியளித்த இந்திய உணவுக் கழகம் 7 லட்சம் டன் அரிசி கையிருப்பில் இருந்தும் அரசி தரமுடியாது என்று கையை விரித்துவிட்டது.

காங்கிரஸ் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாதபடி மத்திய அரசு தடுத்து விட்டதாகவும் அரிசியிலும் அரசியல் செய்வதாகவும் சித்தராமையா குற்றஞ்சாட்டினார். மேலும் அரிசி உற்பத்தி செய்யும் மாநிலங்களிடமிருந்து அரிசி கேட்டுப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் கொடுத்த வாக்குறுதியை திட்டமிட்டபடி ஜூலை மாதத்திலிருந்து அமல்படுத்த முடிவு செய்த சித்தராமையா, கூடுதல் 5 கிலோ அரிசிக்கு பதில் ஒரு கிலோவுக்கு ரூ.34 வீதம் 5 கிலோவுக்கான தொகையை ரொக்கமாக குடும்ப அட்டைதாரர்களின் சேர்க்கும் யோசனையை முன்வைத்தார்.

இந்த நிலையில் இலவச அரிசிக்கு பதில் குடும்ப அட்டைதார்ர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் பணம் போடும் திட்டத்தை அவர் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் கீழ் 1.28 கோடி குடும்ப அட்டைதார்ர்கள் பயன்பெறுவார்கள்.மொத்தம் உள்ள குடும்ப அட்டைதார்ர்களில் 82 சதவீதம் பேர் அதாவது 1.06 கோடி பேர் ஆதாருடன் தங்கள் குடும்ப அட்டைகளை இணைத்து வங்கிக்

கணக்கும் தொடங்கியிருந்ததால் அவர்களுக்கு வங்கிக் கணக்கில் 5 கிலோ கூடுதல் அரிசிக்கான பணம் சேர்க்கப்ட்டது. எஞ்சியுள்ளவர்கள் வங்கிக் கணக்கு தொடங்கியவதும் அவர்களுக்கும் பணம் போடப்படும்.குடும்ப அட்டை வைத்துள்ள 1.27 கோடி பேரில் 94 சதவீத பெண்கள் குடும்பத் தலைவிகளாக அறிவித்துள்ளனர். 5 சதவீத ஆண்கள் தங்களை குடும்பத் தலைவர்கள் என்று கூறியுள்ளனர்.

ஏற்கெனவே பெண்கள் பேருந்தில் இலவச பயணம் செய்ய அனுமதிக்கும் திட்டம் கடந்த மாதம் தொடங்கிவைக்கப்பட்டது. கிருஹஜோதி திட்டத்தின்கீழ் மாதம் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டமும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மீதமுள்ள இரண்டு திட்டங்கள் அதாவது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 நிதியுதவி வழங்கும் திட்டம் மற்றும் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.2,000 உத்தவித்தொகை வழங்கும் திட்டமும் விரைவில் தொடங்கிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com