#BREAKING : கர்நாடகா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா..!

siddaramaiah
siddaramaiah
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

கர்நாடகா முதல்வர் சித்தராமையா பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் உயர்மட்ட தலைமையின் உத்தரவின் பேரில் ராஜினாமா செய்துள்ளதாக சித்தராமையா கூறியுள்ளார்.

கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா, அவரது காவேரி அரசு இல்லத்தில் வைத்து அமைச்சர்களுக்கு இன்று காலை உணவு விருந்தளித்தார். அப்போது, தன்னுடைய ராஜினாமா முடிவை அமைச்சர்கள் மத்தியில் அவர் அறிவித்தார். காங்கிரஸ் கட்சி தலைமையின் அறிவுறுத்தல்படி, இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் அமைச்சரவை சகாக்கள் மத்தியில் சித்தராமையா கூறினார்.டெல்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சி தலைமையுடனான ஆலோசனைக் கூட்டத்தில், தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சித்தராமையா ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிவையில் இன்று தமது ராஜினாமா முடிவை அவர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் மேலிட கூட்டத்தில் பதவி விலக இருக்கும் சித்தராமையாவுக்கு மாநிலங்களவை எம்.பி பதவி வழங்க முன்வந்ததாகவும், ஆனால், அதை அவர் ஏற்க மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பின் சித்தராமையா பேட்டி அளித்தார். அவர் பேசுகையில்,எல்லாம் சமம் என்ற எண்ணம் கொண்டவன் நான். எல்லோருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும், அப்படி இல்லை என்றால் சமநிலை தவறும். அந்த சமமின்மை நீங்க வேண்டும் என்றால் அனைவருக்கும் சம வாய்ப்பு எப்போதும் கிடைக்க வேண்டும் என கூறினார்.

இதையும் படியுங்கள்:
#BREAKING : வில் அம்பு பட இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம் காலமானார்..!
siddaramaiah
logo
Kalki Online
kalkionline.com