கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல்!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல்!

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான இன்று இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது.

கர்நாடக சட்டப் பேரவை தேர்தல் வருகிற 10ம் தேதி தேர்தல் நடக்கிறது. 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப் பேரவை வருகிற 10ம் தேதி தேர்தல் நடக்கிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 3 ஆயிரத்து 632 வேட்பாளர்கள் 5 ஆயிரத்து 102 மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இதில் 678 மனுக்கள் தள்ளுபடி செய்யப் பட்டது. 3 ஆயிரத்து 44 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

மனுக்கள் வாபஸ் பெற இன்று கடைசி நாள் ஆகும். நேற்று ஞாயிற்றுக் கிழமை பொது விடுமுறை என்பதால் இன்று ஒரு நாள் மட்டுமே மனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் உள்ளது. தேர்தலில் இருந்து விலக விரும்புகிறவர்கள் இன்று மதியம் 3 மணிக்குள் தங்களின் மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அதிகாரப் பூர்வ இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலையில் வெளியிடப் படுகிறது.

இதில் எந்தெந்த தலைவர்களிடையே போட்டி ஏற்படும், தொகுதிகளில் எத்தனை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பது போன்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக தெரிய வரும். சுயேச்சை வேட்பாளர்களுக்கு இன்றே சின்னங்களும் ஒதுக்கப்பட உள்ளன. இந்த இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு கர்நாடக சட்டப் பேரவை தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com