பெங்களூருக்கு குடிநீர் தருவதற்காகத்தான் மேகதாது அணை கட்டப்படுகிறது - பிரியங்க் கார்கே விளக்கம்

பெங்களூருக்கு குடிநீர் தருவதற்காகத்தான் மேகதாது அணை கட்டப்படுகிறது -  பிரியங்க் கார்கே விளக்கம்

காவிரியின் உபரி நீரை தேக்கிவைத்து, சரியான முறையில் பயன்படுத்தி பெங்களூரு மாநகரத்திற்கு குடிநீர் அளிப்பதுதான் மேகதாது அணையின் முக்கியமான நோக்கம் என்று கர்நாடக மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தேசியத்தலைவருமான மல்லிகர்ஜீனா கார்கேவின் மகனுமான பிரியங்க் கார்கே விளக்கம் தந்திருக்கிறார்.

கனகபுரா அருகே மேகதாது என்னுமிடத்தில் காவிரியின் குறுக்கே புதிய அணையை கட்டும் திட்டம் ஏற்கனவே பரிசீலினையில் இருக்கிறது. சமீபத்தில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அணைக்கட்டும் பணிகளை ஆரம்பித்துவிடும் திட்டத்தில் இருக்கிறது. 9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டுள்ள அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய கர்நாடக அமைச்சர் ப்ரியந்த் கார்கே, காவிரியின் உபரி நீரை தேக்கிவைத்து பயன்படுத்துவதற்காகவே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. காவிரி நீர் பங்கீட்டை தடுப்பது நோக்கமல்ல. யாருடைய நீரையும் தடுக்கும் எண்ணமோ, மறுக்கும் எண்ணமோ எங்களுக்கு இல்லை என்றார்.

காவிரி நீரில் வரும் உபரி நீரை மட்டுமே பயன்படுத்தப்படப்போவததாகவும் பிற மாநிலங்களுக்கு உரிய நீர் கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பேசி வருகிறது. மின் உற்பத்தி, பெங்களூரு நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அணை கட்ட இருப்பதாக சொல்வதன் மூலமாக பெங்களூர் வாழ் தமிழர்களின் ஆதரவையும் பெற முடியும் என்று எண்ணுகிறது.

மேகதாதுவில் அணை கட்டுவதால் காவிரியின் கடைமடை டெல்டாவுக்கு வந்து சேர வேண்டிய காவிரி நீர் வரப்போவதில்லை. கடைமடைப் பகுதி முற்றிலுமாக வறண்டு போவதற்கு வாய்ப்பிருப்பதாக தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com