கனமழையால் திறந்துவிடப்பட்ட கர்நாடக அணைகள்: டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி!

காவிரி
காவிரி

ர்நாடகா மாநிலத்தின் குடகு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பெய்யும் கனமழையால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. தொடரும் மழையால் 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் வேறு வழியின்றி அணைகள் திறக்கப்பட்டுள்ளன.

மேட்டூரில் தண்ணீர் வரத்து 120 கனஅடிக்கும் குறைவாக இருந்த நிலையில் காவிரி கடைமடை பகுதியில் இவ்வாண்டு குறுவை சாகுபடி கேள்விக்குறியாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்திருந்தார்கள். காவிரியில் தண்ணீர் வராவிட்டால் 2 லட்சம் ஏக்கர் அளவில் பயிர் சாகுபடி வீணாகும் என்று அரசியல் கட்சித் தலைவர்களும் கேள்வி எழுப்பியிருந்தார்கள். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் நிவாரணம் தரவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வறட்சி நிலவுவதாகவும் குடிநீருக்கே போதுமான தண்ணீர் இல்லையென்று கர்நாடக அரசு தெரிவித்திருந்தது. மழை பெய்து, போதுமான தண்ணீர் கிடைத்தவுடன் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்று கர்நாடகா மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமாரும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கர்நாடகத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடிக்கும் மேல் உயர்ந்துவிட்டது. இன்னும் முழு கொள்ளளவை எட்டுவதற்கு 10 அடி மட்டும் எஞ்சியுள்ள நிலையில் வேறு வழியின்றி தண்ணீர் திறந்தவிட வேண்டியிருந்தது.

கடந்த ஒரு மாதமாக 5 ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்பட்ட நிலையில் நேற்று மூன்று மடங்காக அதிகரிக்கப்படுள்ளது. நேற்று திறந்துவிடப்பட்ட தண்ணீர், இன்று மாலை தமிழக கர்நாடக எல்லையான பிலி குண்டலு பகுதிக்கு வந்து சேருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இனி வரும் நாட்களில் இரண்டு மடங்காக உயர்த்தப்படும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், காவிரி நீர் கடைமடை டெல்டாவுக்கு வந்து சேர மூன்று வாரங்களாகிவிடும்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com