கலைஞர் நூற்றாண்டு விழா - அடுத்த மாதம் முழுவதும் விழாக்கோலம்!

கலைஞர் நூற்றாண்டு விழா - அடுத்த மாதம் முழுவதும் விழாக்கோலம்!

ஈடில்லா ஆட்சி, இரண்டாண்டே சாட்சி என்னும் பெருமிதத்தோடு மூன்றாவது ஆண்டை தொடங்கும் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு, அடுத்த ஆண்டு முழுவதும் கலைஞரின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் ஏராளமான ஏற்பாடுகளை செய்திருக்கிறது.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஜூன் 3-ந்தேதி முதல் கொண்டாடப்படவிருக்கிறது. இதில் தி.மு.,கவின் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் தேசியத் தலைவர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் பெரிய அளவில் விழாக்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் நூற்றாண்டு விழா கொண்டாடங்கள் குறித்த ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தி.மு.கவின் உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் வரும் ஞாயிறு காலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவிருப்பதாக தி.மு.கவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருக்கிறார்.

அடுத்த மாதம் மட்டுமே மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் ஏராளமான பிறந்த நாள் பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் குறிப்பாக வெளிமாநிலங்களிலிருந்து வரும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் நடைபெறவிருக்கும் விழாவில் இரண்டாண்டு ஆட்சி குறித்தும், ஜல்லிக்கட்டு விலக்கு உள்ளிட்ட விஷயங்களுக்கு கிடைத்த வெற்றி குறித்தும் விளக்கும் கொள்கை பிரச்சார கூட்டமாக அமையவிருக்கிறது. அடுத்த வாரம் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள இருப்பதால் அதற்குள் நிகழ்ச்சி நிரல் அனைத்தையும் இறுதி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது

முதல் நிகழ்ச்சியாக வரும் ஜூன் 5-ந்தேதி கலைஞர் பிறந்தநாள் விழாவில் குடியரசுத் தலைவர் முர்முர் கலந்து கொள்கிறார். கிண்டி கிங் ஆஸ்பத்திரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்தர மருத்துவமனையை திறந்து வைக்கும் குடியரசுத் தலைவர், பின்னர் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்கிறார்.

அடுத்ததாக திருவாரூர் காட்டூர் பகுதியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஜூன் 15-ந் தேதி திறந்து வைக்கிறார். அடுத்த மாதம் இறுதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் பிறந்த நாள் கொண்டாட்ட விழாவில் முதல்வர் கலந்து கொண்டு பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

இனி அடுத்த மாதம் முதல் பா.ஜ.கவுக்கு எதிரான மாநிலக்கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்திற்கு பயணம் மேற்கொள்வதற்கு வாய்ப்புள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் சேருமாறு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com