பெண்கள், ஆண்கள் என அனைவருக்கும் தற்போது கருங்காலி மாலை மீது ஆர்வம் அதிகமாகி வருகிறது. பாசிட்டிவ் வைப் தருவதாக கூறப்படும் கருங்காலி மாலை ருத்ராட்சம் போன்று ஒரு மரத்தில் இருந்து விளைகிறது. ருத்ராட்சம் மாலை போன்றே இந்த கருங்காலியையும் மாலையாக செய்து அனைவரும் கழுத்தில், கைகளில் அணிந்து வருகின்றனர்.
பலரும் கருங்காலி மாலையை வெள்ளியில் கோர்த்து போடுகிறார்கள். அந்த அளவிற்கு கருங்காலி மாலையின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
கருங்காலி ஒரு பழைமையான மர வகையைச் சார்ந்தது. பல ஆண்டுகள் வாழ்ந்த ஒரு மரத்தின் நடுப்பகுதி மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருமையாக இருக்கும். அப்படி கருமை படர்ந்த நடுப்பகுதியை வெட்டி நமது தேவைக்கேற்ப சுவாமி சிலைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் செய்யப்படுகிறது. குறிப்பாக, பழைய காலத்தில் உலக்கைகளை கருங்காலி மரத்தில்தான் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். தற்போது இம்மரம் விலை உயர்ந்து காணப்படுவதால், உலக்கைகள் வேறு சில மரங்களினால் செய்யப்படுகிறது. அந்தக் காலத்தில் செய்யப்பட்ட மரப்பாச்சி பொம்மைகள் எல்லாம் கருங்காலி மரத்தில்தான் செய்யப்பட்டவை. குழந்தைகள் அவற்றைக் கடித்து விளையாடினால் கூட உடலுக்கு எந்தத் தீங்கு விளைவிக்காது.
கருங்காலி மரம் மின் கதிர்வீச்சுகளைத் தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது. இதனால் இதன் நிழலில் அமர்ந்தால் கூட உடல் நோய் நீக்கும் தன்மை கொண்டது. இதனை நடிகர்களான சூரி, தனுஷ் அணிந்து வருவதால் இளைஞர்கள் பலரும் இதன் மீது ஆசை கொண்டுள்ளனர். எங்க பார்த்தாலும் இளைஞர்கள் கருங்காலி மாலை என்று தான் கூறி வருகின்றனர். இப்படி இருப்பதால் சமூக வலைதளங்களில் கருங்காலி மாலை குறித்த மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது.
கருங்காலி மாலை அணிந்தால் பிரச்சனைகள் சரியாகும் என நம்பப்படுவதால், உனக்கு இருக்க பிரச்சனைக்கு கருங்காலி மாலை பத்தாதுடா கருங்காலி மரமே வேண்டும்டா என்று மீம்ஸ் பகிரப்பட்டுள்ளது. மேலும், எப்படினே இவ்வளவு இஎம்ஐ வச்சிட்டு ஜாலியா இருக்கீங்க, அதான் கருங்காலி மாலை போட்டிருக்கேன்லடா இனி அது பாத்துக்கும் என்றெல்லாம் மீம்ஸ் வைரலாகி வருகிறது.