#BREAKING : சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா தற்காலிக சபாநாயகராக நியமனம்..!

new speaker
new speaker source:oneindiatamil
Updated on

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழகத்தின் முதலமைச்சர் ஆக பதவி ஏற்றார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் விஜய்க்கு, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.அவரைத் தொடர்ந்து ஒன்பது அமைச்சர்களும் பொறுப்பேற்றனர்.

அதன்படி செங்கோட்டையன், ராஜ்குமார், அருண் ராஜ், வெங்கட்ரமணன், ஆதவ் அர்ஜுனா, டாக்டர் பிரபு மற்றும் கீர்த்தனா, புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் அமைச்சர்களாக பதவி ஏற்றிக்கொண்டனர். முதலமைச்சராக பொறுப்பேற்றதும் 200 யூனிட் மின்சாரம் இலவசம், சிங்கப்பெண் சிறப்புப்படை, போதை ஒழிப்பு படையை ஆகிய திட்டங்களுக்கு முதல்வர் விஜய் கையெழுத்திட்டார்.

இந்த நிலையில் தமிழக சட்டசபை நாளை காலை 11 மணிக்கு கூட இருப்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதையடுத்து

தற்காலிக சபாநாயகராக கருப்பையா என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இவர் மதுரை மாவட்டம் தவெக சார்பில்சோழவந்தான் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதையடுத்து இன்னும் சற்று நேரத்தில் கருப்பையா தற்காலிக சபாநாயகராக பதவியேற்க உள்ளார். அவருக்கு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தான் பதவி பிரமாணம் செய்து வைப்பார்.இந்த விழா ஆளுநர் மாளிகையில் நடைபெறும்.

நாளை அனைத்து எம்எல்ஏக்களும் சட்டசபையில் பதவிப்பிரமாணம் செய்ய இருக்கும் நிலையில் அதன்பிறகு நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும். இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் மட்டுமே விஜய்யால் முதல்வராக தொடர முடியும். தோல்வியடைந்தால் முதல்வர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். இதனால் சட்டசபையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பு மிகவும் முக்கியமானது.

logo
Kalki Online
kalkionline.com