கருவாடு வாங்கலியோ கருவாடு. மதுரை ரயில் நிலையத்தில் முதல் முறையாக ராமேஸ்வரம் கருவாடு விற்பனை.

கருவாடு வாங்கலியோ கருவாடு. மதுரை ரயில் நிலையத்தில் முதல் முறையாக ராமேஸ்வரம் கருவாடு விற்பனை.
Published on

ந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் அந்தந்த பகுதிகளின் அடையாளமான பாரம்பரிய உணவு வகைகளை  ரயில் நிலையங்களில் விற்பனை செய்வதற்கு பிரதமரின் ஒரு ரயில் நிலையம் ஒரு பொருள் திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு ரயில் பயணிகளிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் மதுரை ரயில் நிலையத்தில் நாட்டிலேயே முதல் முறையாக “லூமிரியன்ஸ் டிரை பிஷ் ஹட்” எனும் கருவாடு விற்பனைக் கூடம் நேற்று முன்தினம் துவங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களைக் கவரும் வகையிலும்  அவர்கள் எளிதாக வாங்கிச் செல்லும் வசதியிலும்  பல்வேறு எடை அளவுகளில் பாக்கெட் ஒன்று 100 ரூபாய் முதல் ரூபாய் 1000 வரை கருவாடு விற்பனை செய்யப்படுகிறது.

இதற்காக ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் கருவாடுகள் தயார் செய்யப்பட்டு, இந்த விற்பனை கூடத்திற்கு கொண்டு வரப்பட்டு ரயில்வேதுறை சார்பில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தினால் மகளிர் சுய உதவிக் குழுக்களும் பயன்பெறுகின்றனர் என்பது மகிழ்விக்கும் செய்தி. இந்தியாவில் மதுரை ரயில் நிலையத்தில்தான் முதல் முறையாக பாரம்பரிய உணவுப்பொருளாக கருவாடு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது .

இந்தத் திட்டத்தின் மூலம் இனி நாம் செல்லும் ஊர்களில் உள்ள உணவுப்பொருட்களை வாங்க முடியவில்லையே எனும் கவலையின்றி வாங்கி ருசிக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com