காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி : தமிழகத்தில் இருந்து சிறப்பு ரயில்கள்!

காசி
காசி
Published on

காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள பழங்கால தொடர்புகளை மீட்டெடுக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 19-ம் தேதி வரை காசியில் நடைபெற இருக்கிறது.

இதில் தமிழ் இலக்கியம், தத்துவம், ஆன்மீகம், இசை நடனம், நாடகம், யோகா, ஆயுர்வேதம், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கருத்தரங்கு, விவாதம், விரிவுரை போன்றவை இந்த விழாவில் நடைபெற இருக்கின்றன. மேலும் தமிழக கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான கலை கண்காட்சி மற்றும் கலை கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து கலைஞர்கள் காசிக்கு செல்ல இருக்கிறார்கள்

அவர்களின் வசதிக்காக நவம்பர் 16, 23, 30-ம் தேதிகள் மற்றும் டிசம்பர் 7 மற்றும் 14 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரம் - பனாரஸ் விரைவு ரயிலில் கூடுதலாக 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

அதே போல், மறு மார்க்கத்தில் நவம்பர் 27 டிசம்பர் 4, 11 மற்றும் 18 ஆகிய நாட்களில் பனாரஸ் - ராமேஸ்வரம் விரைவு ரயிலில் . 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட இருக்கின்றன.

இதே போல சென்னை, கோயம்புத்தூர் கலைஞர்களின் வசதிக்காக எர்ணாகுளம் - பாட்னா விரைவு ரயில், டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் - கயா விரைவு ரயில், பாடலிபுத்திரம் - பெங்களூர் விரைவு ரயில் ஆகியவற்றில் முறையே 3 குளிர்சாதன படுக்கை வசதி பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com