கதிர்காமம் முத்துமாரியம்மன் திருவிழா! பாண்டிச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

கதிர்காமம் முத்துமாரியம்மன் திருவிழா! பாண்டிச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

பாண்டிச்சேரியின் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்று கதிர்காமம் முத்துமாரியம்மன் கோயில் செடல் தெருவிழா. இன்று கொண்டாடப்பட இருக்கும் செடல் திருவிழாவை முன்னிட்டு பாண்டிச்சேரி அரசின் பள்ளிக்கல்வித்துறை 37 அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து நேற்று உத்தரவிட்டது.

வருடம் ஒருமுறை கதிர்காமம் முத்துமாரியம்மன் கோயிலில் கொண்டாடப்படும் இந்த செடல் திருவிழாவுக்கு பாண்டியில் இருந்து மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள்.

பாண்டிச்சேரியில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நைனார் மண்டபத்தில் அமைந்திருக்கும் முத்து மாரியம்மனை வணங்கி உடலில் அலகு குத்திக் கொண்டு பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களைச் செலுத்துவதே செடல் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இது காலம் காலமாக இப்பகுதி மக்களிடையே பரவலாகப் பின்பற்றப்படும் நேர்த்திக்கடனாக விளங்கி வருகிறது.

உடலில் மிக நுண்ணிய ஊசியால் ஆயிரம் துளைகளிட்டு தங்களை சுயவதைக்கு உள்ளாக்கிக் கொண்டு அம்மனை வணங்கினால் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறும் என பக்தர்கள் நம்புகிறார்கள். இது போன்ற நேர்த்திக் கடன்கள் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் வேறு வேறு பெயர்களில் அனுசரிக்கப்பட்டு வருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com