கெஜ்ரிவாலின் ஆணவத்துடனான இந்த மொழி ஏற்கத்தக்கதல்ல - நடிகை குஷ்பூ ஆவேசம் !

கெஜ்ரிவாலின் ஆணவத்துடனான இந்த மொழி ஏற்கத்தக்கதல்ல - நடிகை குஷ்பூ ஆவேசம் !
Published on

ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெற்றது குறித்து பிரதமர் மோடியை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடுமையாக விமர்சித்தார் . இது குறித்து நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு ட்விட்டரில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கடுமையாக சாடியுள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, மக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ.2000 நோட்டுகளை மே 23-ம்தேதி முதல் வங்கிகள் மூலமாக மாற்றிக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ரிசர்வ் வங்கியின் இந்த ரூபாய் 2000 நோட்டு திரும்ப பெரும் அறிவிப்புக்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளிடையையே ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளன. இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால், இதற்குத்தான் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும் என்று விமர்சனம் செய்திருந்தார்.

கேஜ்ரிவாலின் இந்த கருத்துக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் எதிர்வினையாற்றியுள்ளார் நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு.

இது குறித்து ட்வீட் செய்துள்ள குஷ்பூ , “ஆணவத்தின் வெளிப்பாடு இது. அரசியல் கருத்து வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், ஒரு தன்மையுடன் கருத்துக்கள் இருக்க வேண்டும். தவிரவும் நமது பிரதமரின் பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இது போன்ற மொழி சற்றுமே ஏற்கத்தக்கது அல்ல” என்று ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார் நடிகை குஷ்பூ.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com