வறண்ட பாலருவி ... தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவித்த கேரள வனத்துறை!

வறண்ட பாலருவி ... தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவித்த கேரள வனத்துறை!
Published on

தமிழக கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாலருவியில் தண்ணீர் வரத்து இல்லாததால் மூடப்படுவதாக கேரள வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம், தமிழக -கேரளா எல்லையில் ஆரியங்காவு பகுதியில் அமைந்துள்ளது பாலருவி. இந்த அருவிக்கு கேரளா சுற்றுலாப் பயணிகளை விட , தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் செல்வது வழக்கம். மேலும், கேரள வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சுற்றுலா தளத்தில் , நாள்தோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து அருவியில் குளிப்பார்கள்.

சில நாட்களுக்கு முன்பு வரை பாலருவியில் லேசாக தண்ணீர் இருந்து வந்தது. இதனால், விடுமுறை தினத்தை கொண்டாட ஏராளமான தமிழக சுற்றுலா பயணிகள், பாலருவிக்கு சென்று ஆனந்த குளியலிட்டு வந்தனர். இந்நிலையில், தற்போது பாலருவி தண்ணீர் இன்றி முற்றிலும் வறண்டு விட்டது.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள அனைத்து நீர்வீழ்ச்சிகள் மற்றும் நீரோடைகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன. குறிப்பாக, குற்றால அருவியின் உட்புறம் உள்ள சாமி சிலைகள் தெரியும் அளவிற்கு, குற்றால அருவி வறண்டு காணப்படுகிறது. கேரள வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பாலருவி, தற்போது மூடப்பட்டுள்ளதாக கேரள வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், பருவமழை பொய்த்துப் போனதன் காரணமாக , தண்ணீரின்றி பாலருவி வறண்டு காணப்படுகிறது. மேலும், தற்போதைய காலத்தில் பராமரிப்பு பணியும் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், பாலருவியானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக , கேரளா வனத்துறையினர் அறிவித்துள்ளனர். ஆகவே, இரு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் யாரும் பாலருவிக்கு வர வேண்டாமென கேரள வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com