கலாமண்டலம் வேந்தர் பதவிலிருந்து கவர்னர் நீக்கம்; கேரள முதல்வர் அதிரடி!

ஆரிப் முகமது கான் நீக்கம்
ஆரிப் முகமது கான் நீக்கம்

கேரளாவில் சட்ட பல்கலைக்கழகம் தவிர மற்ற 15 பல்கலைக் கழகங்களின் வேந்தராக கவர்னர் ஆரிப் முகமது கான் இருந்துவருகிறார். இந்த நிலையில் அப்பல்கலைக் கழகங்களின் விதிகளில் மாற்றம் ஏற்படுத்தி கவர்னரை வேந்தர் பதவியிலிருந்து நீக்கும் வகையில் தனித்தனி மசோதாக்கள் கொண்டுவர கேரள அரசு தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் கேரள கலாசார துறையின் கீழ் இயங்கிவரும் கலாமண்டலம் கல்ப்பித பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியில் இருந்து கவர்னர் ஆரிப் முஹம்மதுகான் நீக்கப்பட்டுள்ளார். 2006-ம் ஆண்டில் இருந்து கவர்னர் இந்த பல்கலைகழக வேந்தராக இருந்து வருகிறார்.

கலாமண்டலம் பல்கலைக்கழக விதிகளின்படி வேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளதால், அந்த அதிகாரத்தை பயன்படுத்தி வேந்தர் பதவியில் இருந்து கவர்னர் நீக்கப்பட்டுள்ளார். விரைவில் புதிய வேந்தர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல, கேரளாவில் அனைத்து பல்கலைக் கழகங்களின் வேந்தர் பதவியில் இருந்தும் கவர்னரை நீக்க முதல்வர் பினராயி விஜயம் தலைமியிலான கேரள அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கவர்னரின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com