கேரளாவை அச்சுறுத்தும் நிபா வைரஸ்.. 7 மாவட்டங்களில் லாக்டவுன்..!

Nipah virus
Nipah virus
Published on

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 வயது சிறுவன் உள்பட 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 160 பேர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கேரளா முழுவதும் மக்கள் முக்ககவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோழிக்கோடு மற்றும் சுற்றுவட்டாரங்களில் 5 கிலோமீட்டர் அளவு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அயன்சேரி, மருதோன்கரா, வில்யபள்ளி உள்ளிட்ட 7 பஞ்சாயத்துக்களைச் சேர்ந்த 43 வார்டுகளை, கோழிக்கோடு மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த வார்டுகளில் வெளிநபர்கள் யாரும் நுழைய அனுமதி இல்லை என்றும், யாரும் வெளியே செல்லக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநில எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களான நீலகரி, கோவை, கன்னியாகுமரி, திருப்பூர், தேனி, தென்காசி உள்ளிட்டவற்றில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தொற்று நோய் தடுப்பு இயக்குநர் செல்வ விநாயகம் அறிவுறுத்தி உள்ளார். கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் நோய் தடுப்பு மருந்து தெளித்தல், எல்லை மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள், கவச உடைகள் இருப்பதை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com