கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்திய கார்த்தியாயினி அம்மா காலமானார்!

கார்த்தியாயினி அம்மா
கார்த்தியாயினி அம்மா

கேரள மாநிலத்தைச் சேர்ந்த கார்த்தியாயினி அம்மா தன்னுடைய 101 வயதில் காலமானார். இவர் அக்ஷரா லக்ஷம் திட்டத்தின் கீழ் தன்னுடைய 96 வயதில் நான்காம் வகுப்பு தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்த தேசியளவில் கவனம்பெற்றார்.

கேரளாவின் ஆலப்புழாவை சேர்ந்த கார்த்தியாயினி அம்மா தன்னுடைய பள்ளி படிப்பை 12 வயதில் இடைநிறுத்தப்பட்டார். தனது 18 வயதில் திருமணம் செய்துக்கொண்ட இவர் ஆறு பிள்ளைகளுக்கு தாயனார். ஆறாவது பிள்ளை பிறந்த 28 நாட்களிலையே கணவர் காலமானார். பிறகு தனி ஒருவராக குடும்பத்தை பார்த்துகொண்டு வந்த இவருக்கு திரும்பி பார்க்கும்பொழுது கடந்து வந்த பாதை மிக மிக நீளமாகத் தெரிந்தது.

ஆம்!! தனது 96 வயதில் முதியவர்களுக்கு கல்வி புகட்டும் திட்டமான அக்ஷரா லக்ஷம் கீழ் நான்காம் வகுப்பு படிக்கத்தொடங்கினார். அதுவரை தனது குடும்பத்துகாக வாழ்ந்த நீள் பாதையிலிருந்து தனக்கானப் பாதையில் 96 வயதில் நடக்க ஆர்ம்பித்தார். இதன் இறுதி தேர்வானது 100 மதிப்பெண்ணிற்கு 30 மதிப்பெண்கள் வாசிப்பு தேர்விற்கும் 30 மதிப்பெண்கள் எழுத்து தேர்விற்கும் மீதி 40 மதிப்பெண்கள் கணக்குப் பாடத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

அதில் வாசிப்பில் 30/30 என முழு மதிபெண்கள் எடுத்திருந்தார். இப்படியாக 98 சதவீதம் எடுத்து இந்தியாவில் முதல் இடத்தைப் பிடித்தார் கார்த்தியாயினி அம்மா. இதனால் நாடு முழுவதும் பல்வேறு தரப்புகளிலிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கார்த்தியாயினி அம்மாவுக்கு 2020 ம் ஆண்டு மார்ச் 8 மகளிர் தினத்தன்று இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வழங்கும் நாரி சக்தி புரஸ்கார் விருது வழங்கப்பட்டது.

அதேபோல், கடந்த குடியரசு தின விழாவின்போது நடைபெற்ற மாநில அரசின் சாதனைகளை பறைச்சாற்றும் கண்காட்சி வாகனத்தில் கார்த்தியாயினி அம்மா உருவம் பதித்த வாகனம் கேரள அரசு சார்பில் இடம்பெற்றது.

கல்வியின் முக்கியத்துவத்தை இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்திய கார்த்தியாயினி அம்மா கடந்த 2022ம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து நேற்று தனது 101 வயதில் ஆலப்புழாவின் சேப்பாட்டில் உள்ள முட்டம் என்ற அவரின் சொந்த ஊரிலையே இயற்கை எய்தினார்.

கேரளா முதலைமைச்சர் பினராயி விஜயம் தனது X தளத்தில் அம்மாவிற்கு இரங்கள் தெரிவித்தார். இன்று அவரின் இறுதி சடங்கு காலை 11 மணியளவில் அவரது சொந்த ஊரிலையே நடந்து முடிந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com