இ கவர்னென்ஸ் திட்டங்களில் கேரளா முதலிடம் - கேரளா மாடல் செய்துள்ள சாதனை

இ கவர்னென்ஸ் திட்டங்களில் கேரளா முதலிடம் - கேரளா மாடல் செய்துள்ள சாதனை
Published on

இந்தியாவின் முதல் இ ஆளுகை பெற்ற மாநிலமாக கேரளா உருவெடுத்துள்ளது. கேரள மாநில அரசின் சேவைகள் அனைத்தும் முழுவதுமாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தொழில்நுட்ப வரலாற்றில் இதுவொரு பெரிய சாதனைதான்.

கேரளா போன்ற நூறு சதவீதம் எழுத்தறிவு பெற்ற மாநிலங்கள் கூட இணைய வழி சேவைகளை கொண்டு வருவதால் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தடுமாறியிருக்கின்றன. இணைய இணைப்பு கூட இல்லாத பல மாநிலங்கள் கேரளாவை பின்பற்றுவதுற்கு இன்னொரு பத்தாண்டுகள் ஆகிவிடும் என்கிறார்கள்.

100 சதவீதம் டிஜிட்டல் மயம் என்பதில் தென்னிந்திய மாநிலங்களுக்கு கேரளா இனி முன்மாதிரியாக இருக்கும். தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் இனி கேரளாவை பின்பற்றி, இ கவர்னென்ஸ் திட்டங்களை முடுக்கிவிடும் என்று எதிர்பார்க்கலாம்.

டிஜிட்டல் மயமாகியுள்ள கேரளா அரசு நிர்வாகத்தின் சாதனை பற்றி விளக்க நேற்று திருவனந்தபுரத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் பினராயி விஜயன், டிஜிட்டல் பயணத்தின் முக்கிமயான சாதனைகளை பட்டியலிட்டார்.

அரசு சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவது என்பது சாமானிய குடிமகனுக்கும் அரசு நிர்வாகத்திற்கும் இடையே ஒரு நெட்வொர்க்கை உருவாக்குவது மட்டுமல்ல. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குடிமக்களை அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி எடுத்துச் செல்வதையும் உள்ளடக்கியது என்று பேசியிருக்கிறார்.

இதுவொரு தொடக்கம்தான். இனி அரசு அலுவலகத்தை தேடி மக்கள் வராமல், மக்களைத் தேடி அரசு நிர்வாகம் செல்வதை உறுதிப்படுத்துவதுதான் எங்களுடைய பணி. கவர்னென்ஸ் என்பது இனி மக்களுக்கு உட்பட்டது. இதை செய்து முடிக்க ஏழு ஆண்டுகள் தேவைப்பட்டன. மக்களுக்காக பணியாற்றுவது என்கிற அரசின் நோக்கத்தை தொழில்நுட்பத்தின் உதவியோடு செய்து காட்டியிருக்கிறோம் என்று முதல்வர் பெருமிதத்தோடு தெரிவித்திருக்கிறார்.

கேரளா பைபர் ஆப்டிக் நெட்வெர்க் மாநிலம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட இருககிறது. இதன் மூலம் இணைய சேவையை அனைத்து மக்களுக்கும் இலவசமாக அளிக்கும் திட்டத்தை கேரளா அரசு செயல்படுத்த இருக்கிறது. குஜராத் மாடல், திராவிட மாடல், ஒடிசா மாடல் என்றெல்லாம் ஏகப்பட்ட மாடல்கள் இருந்தாலும் கேரள மாடல் சற்று முன்னிலையில் இருப்பது என்னவோ உண்மைதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com