அமெரிக்கா குற்றச்சாட்டு: மீண்டும் இந்தியாவை கை காட்டும் ஜஸ்டின் ட்ரூடோ!

Justin Trudeau
Justin Trudeau

காலிஸ்தான் பிரிவினைவாதியை அமெரிக்காவில் கொல்ல நினைத்த இந்தியர் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறிய கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

1990களில் இருந்தே பஞ்சாபை காலிஸ்தான் என்ற தனி நாடாக அறிவிக்க வேண்டும் என பிரிவினைவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தியாவில் இத்தகைய பிரிவினைவாத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் காலிஸ்தான் இயக்கங்களுக்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை. எனவே காலிஸ்தான் பிரிவினைவாதிகள் அங்கே இயங்கி வருகிறார்கள். சிலர் வெளிநாடுகளில் இருந்து கொண்டே இந்தியாவுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் நிகழ்த்தவும் திட்டமிட்டு வருவதாக புகார்களும் எழுந்துள்ளது. 

ஏற்கனவே காலிஸ்தான் ஆதரவாளரை இந்தியர்கள் கொன்றதாக கனடா அதிபர் இந்தியா மீது குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில், அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாதி ஒருவரை கொல்ல சதி செய்ததாக இந்தியர் ஒருவர் மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், கனடா பிரதமர் ட்ரூடோ, எங்கள் நாட்டில் கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்ட காலிஸ்தான் ஆதரவாளர் குறித்த விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

அதாவது “அமெரிக்காவிலிருந்து வெளிவரும் செய்திகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நாங்களும் தொடக்கத்திலிருந்தே இதே கருத்தைதான் சொல்லி வருகிறோம். இதை இந்தியா தீவிரமாக எடுத்துக்கொண்டு எங்களுடன் இணைந்து செயல்பட்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதன் பின்னணியில் உண்மையில் யார் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய உதவ வேண்டும்” என்று அவர் கூறினார்.

இவர் இப்படி கூறுவதைப் பார்த்தால், காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா மற்ற நாடுகளுக்குள் ஊடுருவி செயல்படுவதைப் போல் இருப்பதால், இவரது கருத்துக்கள் மீண்டும் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. ஏற்கனவே இத்தகைய குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தனர். இருப்பினும் அவர் ஆதாரங்களை வெளியிடாமல் தொடர்ந்து இந்தியாவை கைகாட்டி வருவது, கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com