

இந்திய அஞ்சல் துறை (India Post) கடிதங்கள் மற்றும் பொட்டலங்களை அனுப்புவதோடு மட்டுமல்லாமல், PPF, சுகன்யா சம்ரித்தி, MIS போன்ற பாதுகாப்பான சேமிப்புத் திட்டங்கள், அஞ்சல் காப்பீடு (PLI), மற்றும் மின்னணு பணப் பரிமாற்றம் போன்ற வங்கிச் சேவைகளையும், நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சத்திற்கும் அதிகமான கிளைகள் மூலம் வழங்குகிறது.
அந்த வகையில் போஸ்ட் ஆபீஸ் (தபால் நிலையம்) சேமிப்புத் திட்டங்கள் பாதுகாப்பான மற்றும் அதிக வட்டி தரும் முதலீட்டு விருப்பங்களாகும். PPF, /navSSY, /navSCSS, /navMIS, /navNSC, மற்றும் RD போன்றவை பிரபலமான திட்டங்கள். இவை 4% முதல் 8.2% வரை வட்டி விகிதங்களையும், 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகளையும் வழங்குகின்றன.
இவை இந்திய அரசால் ஆதரிக்கப்படுவதால், மிகவும் பாதுகாப்பானது மற்றும் முதலீட்டுக்கு முழு உத்தரவாதம் உண்டு.
வங்கிகளை விட அதிக நம்பகத்தன்மை கொண்டவை மற்றும் ரிஸ்க் இல்லாத (Risk-free) நிலையான வருமானம் மற்றும் வட்டி விகிதங்களை (எ.கா: PPF, SCSS) வழங்குகின்றன. குறிப்பாக நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது சிறந்தது.
நாம் டெபாசிட் செய்யும் பணத்திற்கு முழு பாதுகாப்பு என்பதால் நாடு முழுவதும் 38 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தபால் நிலையங்களில் 22 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளனர். அதனாலேயே கிராமப்புறங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை சாமானியக்கள் தங்கள் கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தைப் பாதுகாக்க தபால் நிலையங்களில் அதிக நம்பிக்கை வைக்கின்றனர்.
போஸ்ட் ஆபிஸில் உள்ள பல்வேறு திட்டங்கள் நல்ல வட்டியை வழங்குவது மட்டுமின்றி, முதலீட்டை இரட்டிப்பாக்கும் வசதியையும் வழங்குகின்றன. அந்த வகையில் 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம் மிகவும் பிரபலமானது. இந்த திட்டத்தில் நீங்கள் பணத்தை டெபாசிட் செய்வதன் மூலம், முதிர்வு நேரத்தில் உங்கள் பணம் நேரடியாக இரட்டிப்பாகும்.
இந்த திட்டத்திற்கு அரசாங்கம் தற்போது 7.5 சதவீத வட்டியை வழங்கும் நிலையில், இதில் ஒரு லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் டெபாசிட் செய்தாலும், இந்த வட்டி விகிதத்தில், ஒரு நிலையான காலத்தில் நீங்கள் போட்ட தொகை இரட்டிப்பாகும் என்பதால் இந்தத் திட்டம் நடுத்தர மக்களுக்குச் சிறந்த திட்டமாகத் திகழ்ந்து வருகிறது.
இந்தத் திட்டத்தில் நீங்கள் போட்ட முதலீடு இரட்டிப்பாவதற்கு 115 மாதங்கள் கால அளவாகும். அதாவது 9 ஆண்டுகள் 7 மாதங்களில் உங்கள் பணம் இரட்டிப்பாகும் என்பதால் நீண்ட காலத் தேவைகளுக்காகப் பணத்தைச் சேமிக்க விரும்புவோருக்கு இது ஏற்ற திட்டமாகும்.
உதாரணமாக, ஒருவர் இந்தத் திட்டத்தில் ஒரே நேரத்தில் ரூ.2 லட்சம் முதலீடு செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். குறிப்பிட்ட கால அளவில் முதிர்ச்சியடைந்த பிறகு, அவர் போட்ட முதலீடு ரூ.2 லட்சமும், வட்டியாக ரூ.2 லட்சமும் கிடைக்கும். அதாவது, அவருக்கு மொத்தம் ரூ.4 லட்சம் கிடைக்கும். இதனாலேயே இந்த திட்டம் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது..
மேலும், குறைந்தபட்ச முதலீடாக 1000 ரூபாயில் இருந்தே யார் வேண்டுமானாலும் இந்த சேமிப்பை தொடங்க முடியும்.. அதிகபட்ச முதலீட்டுக்கு எந்தவிதமான உச்ச வரம்பும் இல்லை என்பது பெரும் முதலீட்டாளர்களுக்கு ஒரு கூடுதல் சாதகமாகும்.
தகுதிகள், பயன்கள்
* இந்த திட்டத்தில் இணைவதற்கு 18 வயது பூர்த்தியடைந்த இந்திய குடிமக்கள் தகுதியானவர்கள்.
* இரண்டு அல்லது மூன்று பேர் தனித்தனியாகவோ அல்லது கூட்டு கணக்காகவோ (ஜாயிண்ட் அக்கவுண்ட்) இதனை தொடங்கலாம். ஒரு ஜாயிண்ட் அக்கவுண்ட்டில் அதிகபட்சம் மூன்று பேர் வரை இருக்கலாம்.
* மேலும் குழந்தைகளின் பெயரில் அவர்களின் பாதுகாவலர்கள் மூலமாகவும் முதலீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது..
* அவசர காலங்களில் அல்லது எதிர்பாராத நிதி நெருக்கடியின் போது இந்தக் கிசான் விகாஸ் பத்திரத்தை ஒரு சொத்தாகக் கருதி வங்கிகளில் அடமானம் வைத்து கடன் பெறும் வசதியும் இதில் உள்ளது.
* இந்த திட்டத்தின் கூடுதல் சிறப்பு என்னவென்றால், நீங்கள் முதலீடு செய்த போஸ்ட் ஆபிஸில் இருந்து இந்தியாவின் எந்த பகுதியிலும், இன்னொரு போஸ்ட் ஆபிஸிற்கு உங்கள் அக்கவுண்ட்டை எளிதாக மாற்றிக் கொள்ள முடியும். அதேபோல் ஒரு நபர் தனது கணக்கை வேறொருவரின் பெயருக்கு மாற்றம் வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது.
* ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு போன்ற ஆவணங்களை சமர்ப்பித்து கணக்கை தொடங்க வேண்டும்.
- உங்கள் கூடுதல் வருமானத்தை இந்தத் திட்டத்தில் செலுத்துவதன் மூலம், உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாப்பானதாக மாற்றலாம்.