செல்போன் டவரில் சிக்கிய பூனைக்குட்டி!

செல்போன் டவரில் சிக்கிய பூனைக்குட்டி!

பெங்களூர் நகரில் செல்போன் டவர் கோபுரத்தின் உயரத்தில் சிக்கிக் கொண்ட பூனைக்குட்டியை “கேர்” என்னும் சார்லி வனவிலங்கு மீட்பு மையம் கழுகுகளின் பார்வையிலிருந்து பத்திரமாக மீட்டுள்ளது.

இது தொடர்பான விடியோவை அந்த மையம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துகொண்டுள்ளது. செல்போன் டவரில் சிக்கி வாழ்க்கையின் இறுதிப் போராட்டத்தில் இருந்த பூனைக்குட்டியை நாங்கள் கோபுரத்தின் உச்சிக்கு சென்று, கழுகு கண்களின் பார்வை பூனைமீது படாமல் பத்திரமாக மீட்டுள்ளோம்.

பூனைக்குட்டியை மீட்கும் ஒவ்வொரு நிமிடமும் எங்களுக்கு முக்கியமானதாக இருந்தது. பூனைக்குட்டி டவரில் இருப்பதை அறிந்த கழுகுகள் அந்த இடத்தை சுற்றிச்சுற்றி வந்தன. செல்போன் கோபுரத்தின் உயரமும் எங்களுக்கு சவாலாக இருந்த்து. மேலும் கழுகுகளும் வானில் வட்டமிட்டு அச்சுறுத்தின. ஆனாலும், நாங்கள் பல சோதனைகளைக் கடந்த அந்த பூனைக்குட்டியை பத்திரமாக மீட்டுவிட்டோம். பூனைக்குட்டியை மீட்கும் செயல் சவாலாக இருந்தபோதிலும் முடிவு மகிழ்ச்சி அளித்தது என்று வனவிலங்கு பாதுகாப்பு மையத்தினர் தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த விடியோவுக்கு நல்ல வரவேற்பு இருந்த்து. துணிச்சலுடனும் அதே சமயம் எச்சரிக்கையுடனும் செயல்பட்டு பூனையை மீட்ட கேர் குழுவினருக்கு பாராட்டுகள் என்று ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

உங்கள் மையம் சிறப்பான சேவையைச் செய்துள்ளது என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார். பூனைக்குட்டியை மீட்க உங்களுக்கு கவசம் தேவைப்பட்டது போலும்! என்று ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார். கேர் என்றாலே பாதுகாவலர் என்று

அர்த்தமாகும். உங்கள் செயலுக்கு பாராட்டுகள் என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.

-----------

பூனையைப் பற்றிய சில தகவல்கள்: பொதுவாகவே நாய்களை விட பூனைகள் மனிதர்களிடம் அதிகம் நெருக்கத்துடன் பழகும்.

அறிவியல் ரீதியாக பார்த்தால், பூனைகளுக்கு மனிதனின் உடல் வெப்ப நிலையுடன் நேரடி தொடர்பு கொள்வது மிகவும் பிடிக்கும். அதனால் தான் பல நேரங்களில் அவை மனிதர்களுடன் மிக மிக நெருக்கமாக இருக்கும். நம் கைகள், கால்கள் அலலது தொடை மற்றும் வயிற்றுப்பகுதிகளின் மேல் உறங்கவும் செய்யும். அதை ஆழ்ந்த உறக்கம் என சொல்ல முடியாது. இந்த நேரத்தில் அவற்றின் உடலில் இருந்து ஒரு வகையான சிறு சப்தமும் (மூச்சு விடுதல் போன்று) நமக்கு தெளிவாக கேட்கும்.

மனித உடலுடன் நேரடி தொடர்பு கொள்ளவே அவைகள் நம் கால், கைகளில் அவ்வப்போது உரசிச் செல்லும். அதாவது நாம் அலட்சியம் செய்வதை அவை விரும்புவது இல்லை.

நாம் தரையிலோ அல்லது நாற்காலியிலோ அமர்ந்திருக்கும் போதும் பூனைகள் முதலில் காலில் உரசி, நமது மன நிலையினை தெரிந்து கொண்டு பின் நம் மடியில் வந்து அமர்ந்து கொள்ள முயற்சிக்கும். நாம் எடுத்து கீழே விட்டாலும் மீண்டும் வந்து அமரும். நாம் வலுக்கட்டாயமாக எதிர்ப்பு தெரிவித்தால் வேறு இடத்துக்குச் சென்றுவிடும்.

பூனைகள் மட்டுமல்ல, பெரும்பாலும் மற்ற மிருகங்களும் தத்தம் மன நிலையை பொருத்து தனிமையில் இருப்பதையே விரும்புகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com