கீழடி அடுத்தக்கட்ட அகழாய்வுப் பணிகள் நாளை மறுநாள் தொடக்கம்!

கீழடி அடுத்தக்கட்ட அகழாய்வுப் பணிகள் நாளை மறுநாள் தொடக்கம்!
Published on

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகாவில் உள்ள கீழடியில் ஒன்பதாம் கட்ட அகழாய்வுப் பணிகள் வரும் ஏப்ரல் 6ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன. இந்த அகழாய்வுப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாகத் தொடங்கி வைக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய மூன்று இடங்களில் ஒன்பதாம் கட்ட அகழாய்வுப் பணிகள் செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளன. கீழடியில் 110 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள தொல்லியல் மேட்டில் 2014ம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல் மூன்று கட்ட அகழாய்வுப் பணிகளை மத்திய தொல்லியல் துறையும், அடுத்த ஐந்து கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறையும் நடத்தியுள்ளது. கீழடியுடன் கங்கைகொண்ட சோழபுரம், பட்டறைப்பெரும்புதுார், வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி, கீழ்நமண்டி, பூதிநத்தம், பொற்பனைக்கோட்டை ஆகிய இடங்களிலும் அகழாய்வுப் பணிகள் தொடங்கப் பட உள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com