கொடைக்கானலில் களைகட்ட போகும் கோடை விழா!

கொடைக்கானலில் களைகட்ட போகும் கோடை விழா!

மலைகளின் இளவரசியான திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் கோடை விழா வரும் 26ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது.

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் சிறந்த கோடைவாசஸ்தலம். சர்வதேச சுற்றுலா தளமாக திகழும் இங்கு, ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை குளுமையான சீசன் நிலவுவது வழக்கம். இந்த காலக்கட்டத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும்.தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுப்பர். கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், ஆண்டுதோறும் கோடைவிழா-மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் ரம்மியமாக துவங்கி உள்ளது. விடுமுறை காலங்களாதலால் கோடை சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுற்றுலாப் பயணிகளை கவர பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.மேலும் அரசின் சார்பில் ஆண்டுதோறும் மலர்க்கண்காட்சியும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தாண்டு கண்காட்சி நடத்தப்படுவதற்கான ஆலோசனை கூட்டம் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் கொடைக்கானலில் நடைபெற்றது. இதில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பெருமாள்சாமி மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்ததும் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது, கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வரும் 26ம் தேதி துவங்கும் மலர்க் கண்காட்சி ஜூன் 2ம்தேதி வரை நடைபெற உள்ளது.

இக்கண்காட்சியில் அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி,ராமச்சந்திரன் மற்றும் நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

கோடை விழாவில் சிறப்பம்சமாக விளையாட்டு போட்டிகள், படகு போட்டிகள், நாய் கண்காட்சி உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என அவர் தெரிவித்தார். ஒவ்வொரு வருடமும் கோடை விழாவையொட்டி மலர் கண்காட்சியில் காய்கறி, மலர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு உருவங்கள் சுற்றுலா பயணிகளை கவருவதாக இருக்கும்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com