2026 ஜனவரியில் கொடைக்கானலில் கடும் குளிர் நிலவி வருகிறது. வெப்பநிலை 3.9 டிகிரி செல்சியஸ் குறைந்து, கடந்த சில தசாப்தங்களில் (Decades) இல்லாத அளவிற்கு உறைபனி (Frost) பதிவாகியுள்ளது.
இது ஜனவரி மாதத்தின் 10வது மிகக் குளிர்ந்த நாளாகக் கருதப்படுகிறது. ஊட்டி, மூணார் போன்ற இடங்களை விட கொடைக்கானல் தென்னிந்தியாவின் மிகக் குளிர்ந்த மலைப் பகுதியாக மாறியுள்ளது. கடும் குளிர் காரணமாக அதிகாலையில் புல்வெளிகள், தாவரங்கள், செடிகள் மற்றும் திறந்த வெளியில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் மீது வெண்ணிற பனிப்போர்வை படர்ந்தது. 21 ஜனவரி 2026இல் 4 degree Celsius மற்றும் 22 ஜனவரி 2026இல் 3.9 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை சரிந்தது. இது தென்னிந்தியாவின் மிகக் குறைந்த வெப்பநிலையாக பதிவாகியுள்ளது.
கொடைக்கானல் வரலாற்றில் மிகக் குளிர்ந்த குளிர்காலங்களில் ஒன்றாக 2026 ஆம் ஆண்டு ஜனவரி உருவெடுத்துள்ளது. ஆனால் மக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் உறைபனியை ரசிக்க சுற்றுலாப் பயணிகள் அதிகாலை நேரங்களில் கூடுகின்றனர். கொடைக்கானல் ஏரியில் படர்ந்திருந்த பனி சூரிய ஒளி பட்டதும் ஆவியாகி செல்லும் காட்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்திழுத்தது. காலை வேலையில் ஏரிக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும், நடைபயிற்சியில் ஈடுபடும் உள்ளூர் மக்களும் இந்த கண்கொள்ளா காட்சியை மெய் மறந்து ரசித்து பார்ப்பதுடன், செல்போன்களில் புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தனர்.
கொடைக்கானலில் நேற்று குறைவான வெப்பநிலை பதிவானது. வழக்கமாக கொடைக்கானலில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை உறைபனிக் காலம் நிலவும். கடந்த ஒரு மாதமாக இரவு முதல் அதிகாலை வரை 5 முதல் 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், பகலில் 11 முதல் 17 டிகிரி வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. அதிகாலையில் புல்வெளிகள், வாகனங்கள் மீது பனி படர்ந்து காஷ்மீர் போல காட்சியளிக்கிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மட்டுமே பதிவானது. இது கொடைக்கானலின் 10வது மிகக் குளிரான நாளாகும் என்று 'தமிழ்நாடு வெதர்மேன்' என்றழைக்கப்படும் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
அவர் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில், "பல ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலம் முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது. ஜனவரி 21ஆம் தேதி கொடைக்கானலில் நாலு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. இது கடந்த 5 ஆண்டுகளில் கொடைக்கானலில் ஜனவரி மாதத்தில் பதிவான 10வது மிகக் குளிரான நாளாகும். நடப்பாண்டில் முதல்முறையாக கடந்த 8ஆம் தேதி 3.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், இரண்டாவது முறையாக 4 நேற்று(21.1.26) 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. ஜனவரி 5, 2003ல் மிக குளிரான நாளாக முதல் இடத்தில் பதிவானது. அன்று 0.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. தென்னிந்தியாவில் உள்ள மலைவாச ஸ்தலங்களில் நேற்று கொடைக்கானலில் தான் மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
0.6 C on 05-01-2003
2.7 C on 07-01-1976
2.8 C on 22-01-1965
3.2 C on 15-01-1975
3.3 C on 14-01-1975
3.4 C on 08-01-2026 (This year)
3.5 C on 22-01-1976
3.7 C on 06-01-1976
3.8 C on 06-01-1975
4.0 C on 21-01-2026 (This year)