உடைந்த ஐபோனை மினி கம்ப்யூட்டராக மாற்றிய நபர்: வியக்க வைக்கும் வைரல் வீடியோ..!

கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவர், திரை முழுவதுமாக உடைந்த நிலையில், கணினி மவுஸைப் பயன்படுத்தி ஐபோனை இயக்குவது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
iPhone with broken screen
iPhone with broken screenimage credit-hindustantimes.com, ifixindia.in
Published on

ஆப்பிள் ஐபோன்களின் டிஸ்ப்ளே முற்றிலும் உடைந்து போனால் அதை சரிசெய்ய பெரும்பாலும் அதிக செலவாகும். ஆனால் கொல்கத்தாவைச் சேர்ந்த நபரின் புத்திசாலித்தனமான தந்திரம் சமூக ஊடக பயனர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவர், திரை முழுவதுமாக உடைந்த ஐபோனை, கணினி மவுஸைப் பயன்படுத்தி இயக்குவது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பார்வையாளர்கள் அந்த நபரின் யோசனையின் படைப்பாற்றலைப் பாராட்டியுள்ளனர்.

கொல்கத்தாவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது ஆப்பிள் ஐபோனின் டிஸ்ப்ளே முற்றிலும் உடைந்த போதிலும், அதைச் சரிசெய்ய தான் தற்செயலாகக் கண்டறிந்த ஒரு செம புத்திசாலித்தனமான ‘மாஸ்' ஐடியாவைப் பயன்படுத்தியுள்ளார்.

இதை ரெஹான் சிங் என்ற அவரது நண்பர், ‘iPhone Ultra Pro Max Hack’ என்ற தலைப்பில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவில் ஐபோன் ஸ்க்ரீன் சுத்தமாக வேலை செய்யாததால், அந்த நபர் ஒரு ‘ஒயர்டு மவுஸை’ கேபிளைப் பயன்படுத்தி ஐபோனுடன் இணைத்தார். போன் ஸ்க்ரீனில் மவுஸ் கர்சர் தோன்றி ஐபோன் சாதாரணமாக இயக்கப்படுகிறது. உடைந்த ஐபோன் டிஸ்ப்ளேவை நம்பியிருக்காமல் பணிகளைச் செய்கிறார்.

ஆரம்பத்தில் பயனற்ற போனை போல் தோன்றிய ஆப்பிள் ஐபோன் திடீரென்று மீண்டும் செயல்பாட்டுக்கு வந்ததை பார்த்த வலைதளவாசிகள் ஆச்சரியத்தில் உறைந்து போயினர். மவுஸை வைத்தே அவர் சிரமமின்றி செல்போனின் செயலியைத் திறப்பது, மெனுக்களைப் பார்ப்பது என ஐபோனை ஒரு மினி கம்ப்யூட்டர் போலவே அவர் இயக்குகிறார். உடைந்த ஆப்பிள் ஐபோனின் டிஸ்ப்ளேவை நம்பியிருக்காமல் அனைத்து பணிகளையும் செய்கிறார்.

ஆப்பிள் ஐபோனின் டிஸ்ப்ளே முற்றிலும் உடைந்த நிலையில், ஐபோன்களை சரிசெய்ய அதிக செலவாகும், ஆனால் இந்த புத்திசாலித்தனமான தந்திரம் சமூக ஊடக பயனர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோ லட்சக்கணக்கானோரின் பார்வைகளையும் அவர்களின் பாராட்டையும் பெற்று வைரலானது. பலர் புத்திசாலித்தனமான ஹேக்கைப் பார்த்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர். மேலும் எளிமையான ஆனால் பயனுள்ள தீர்வின் பின்னணியில் உள்ள அந்த நபரின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டினர்.

இதையும் படியுங்கள்:
19 நிமிட அந்தரங்க வீடியோ : இதைப் பகிர்ந்தால் ஐந்து லட்சம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை..!
iPhone with broken screen

இதை பார்த்த வலைதளவாசி ஒருவர், டிஸ்ப்ளே மாத்த காசு இல்லையா? கவலைப்படாதீங்க, ஒரு 200 ரூபாய் மவுஸ் வாங்குங்க!... என கிண்டலாகக் கமெண்ட் செய்திருந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com