டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக கிருதிவாசன்!

டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக கிருதிவாசன்!
Published on

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டு உள்ளார் கிருதிவாசன். ராஜேஷ் கோபிநாதன் டி சி எஸ் நிறுவனத்தில் பதவியை ராஜினாமா செய்ததை தொடந்து கிருதிவாசன் சிஇஓவாக நியமிக்கப்பட்டு உள்ளார் .

கிருதிவாசன் கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் பிஈ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் 1981 - 1985 பெற்றார். இதை தொடர்ந்து ஐஐடி கான்பூர் கல்லூரியில் எம்டெக் , இண்டஸ்ட்ரியல் அண்ட் மேனேஜ்மெண்ட் பிரிவில் பட்டம் பெற்றவர்.

கிருதிவாசன் டிசிஎஸ் நிறுவனத்தில் மார்ச் 16 ஆம் தேதி முதலே சிஇஓவாக பெறுப்பேற்றுள்ளார் தற்போது சென்னை டிசிஎஸ் அலுவலகத்தில் இருந்துக் கொண்டு ஒட்டுமொத்த வர்த்தகத்தை நிக்வாகம் செய்து வருகிறார்.

ராஜேஷ் கோபிநாதன் டி சி எஸ் நிறுவனத்தில் பதவியை ராஜினாமா செய்தாலும் செப்டம்பர் 15 வரையில் இப்பதவியில் இருப்பார், இக்காலக் கட்டத்தில் புதிய சிஇஓவாக நியமிக்கப்பட்டு உள்ள கிருதிவாசன் நிர்வாகத்தை கையில் எடுக்க உதவி செய்ய உள்ளார். 2017ல் என் சந்திரசேகரன் டாடா சன்ஸ் தலைவராக நியமிக்கப் பட்ட போது இவருடைய பதவி ராஜேஷ் கோபிநாதன்-க்கு கொடுக்கப்பட்டது.

ராஜேஷ் கோபிநாதன் 22 ஆண்டுகாலம் டி சி எஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பிறகு இந்நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார். இதில் 6 வருடம் டி சி எஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ ஆக பணியாற்றியுள்ளார்.

டிசிஎஸ் நிறுவனத்தில் 34 ஆண்டுகளுக்கும் அதிகமாக பணியாற்றிய காரணத்தால் டி சி எஸ் கொள்கை, அடிப்படை திட்டம், இலக்கு அனைத்தும் தனக்கு தெரியும். இதேபோல் தான் பணி செய்யும் முறையில் எவ்விதமான மாற்றமும் இருக்காது தொடர்ந்து இதே முறையை தான் கடைப் பிடிப்பேன் என கிருதிவாசன் தெரிவித்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com